மந்தரம் தருதி சென்று’ என - ‘நெருங்கிய ஒளியையுடைய மந்தர மலையைப் போய்க் கொணர்க’ என்று சொல்ல; ‘வெறிது, கொல்’ எனக் கொடு விசும்பின் மீச்செலும் - ‘உள்ளீடு இல்லாததொரு எளிய பொருளோ’ எனக் (கண்டோர்) கருதுமாறு (முயற்சி ஏதுமின்றி விளையாட்டாக) எடுத்துக் கொண்டு விண்மீது சென்ற; உறுவலிக்கலுழனே ஒத்துத் தோன்றினான் - மிக்க வலிமையையுடைய கருடனையே போன்று (அனுமன்) தோன்றினான். |
(97) |
| 8800. | பூதலத்து, அரவொடு மலைந்து போன நாள், ஓதிய வென்றியன், உடற்றும் ஊற்றத்தன், ஏதம் இல் இலங்கை அம் கிரிகொடு எய்திய தாதையும் ஒத்தனன், உவமை தற்கு இலான்.* |
பூதலத்து, அரவொடு மலைந்து போனநாள் - பூவுலகின் கண்ணே ஆதிசேடனுடன் போர் செய்து சென்ற காலத்து; ஓதியவென்றியன், உடற்றும் ஊற்றத்தன் - சிறப்பித்துக் கூறப்படும் வெற்றியை உடையவனும், போர் செய்யும் வலிமையுடையவனுமாகி; ஏதம்இல் இலங்கை அம்கிரி கொடு எய்திய - குற்றமில்லாத இலங்கைக்கு இடமாக உள்ளதிரிகூட மலையைப் பறித்துக்கொண்டு தென்திசை எய்திய;தாதையும் ஒத்தனன் தற்கு உவமை இலான் - தன் தந்தையாகிய வாயுதேவனையும் ஒத்து விளங்கினான் - தனக்கு உவமை இல்லாதவனாகிய அனுமன். |
(98) |
‘வந்தான்’ என்பதற்குள்ளாக, அனுமன் வந்து நிலத்தில் அடி இடுதல் |
8801. | ‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து ஊன்றினன், நிலத்து அடி; கடவுள் ஓங்கல்தான் வான்தனில் நின்றது, வஞ்சர் ஊர் வர ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான். |
‘தோன்றினன்’ என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து - (அனுமனது ஆர்ப்பொலி கேட்டு) சாம்பவன், அனுமன் வந்து தோன்றினான்’ என்று சொல்லிய அச் சொல்லுக்கு முன்பே வந்து; நிலத்து அடி ஊன்றினான் - (அனுமன்) நிலத்தில் அடியை ஊன்றினான்; வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் - வஞ்சக |