பக்கம் எண் :

70யுத்த காண்டம் 

விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான்.

விதிகாயினும்   வீரம் வெலற்கு அரியான் - விதியே சினந்தாலும்
வெல்லமுடியாத  வீரத்தை  உடைய;  அதிகாயன்  எனும் பெயரான் -
அதிகாயன்  என்னும்;  பெயரை உடையவன்; நதி காய் நெடுமானமும்
நாணும்  உறா
 -  ஆற்று  நீரும்  சுடுமாறு  பெரிய  அவமானத்தால்
தோன்றிய  கடுஞ்சினமும்  நாணமும்  அடைந்து.  மதி  காய்  குடை
மன்னனை
 -  மதியை வெல்லும் வெண் கொற்றக் குடையை உடைய
இராவணனை;  வைது  உரையா  அறைவான் - பழித்துக் கூறிக் கூறத்
தொடங்கினான்.

விதி    - விதிக்கும் கடவுள் பிரமன் என்பர். பிரமன் தலை எழுத்து
என்ற  வழக்கை  உன்னுக.  நெடுமானம் - பெரிய  அவமானம். ஈண்டு
அதனால்  தோன்றிய  கடுஞ்சினம்.  உறா  -  உற்று,  செய்யா  எனும்
வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். உரையா - உரைத்து.

                                                   (7)

7734.‘வான் அஞ்சுக; வையகம் அஞ்சுக; மா-
லான் அஞ்சு முகத்தவன், அஞ்சுக; "மேல்
நான் அஞ்சினேன்" என்று, உனை நாணுக; போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ?

வான்    அஞ்சுக - வானத்தில்  உள்ள  தேவர்கள   அஞசட்டும்;
வையகம்  அஞ்சுக  -  மண்ணுலக  மாந்தர்  அஞ்சட்டும்; மாலான் -
திருமாலும்;  அஞ்சு  முகத்தவன்  அஞ்சுக - ஐந்து முகத்தை உடைய
சிவபிரானும்  அஞ்சுக;  மேல்  நான்  அஞ்சினென் என்று - மேலும்
நான்   போருக்கு   அஞ்சினேன்   என்று   உன்னைப்   பற்றி  நீயே
நாணப்படுக;  போர்யான்  அஞ்சினென்  என்றும்  இயம்புவதோ -
போருக்கு நான் அஞ்சினேன் என்று கூறுவது தகுதியுடையதா?

நான்    அஞ்சினேன் என்று உனை நாணுக - நீ அஞ்சினாய் என்று
உன்னுள்   நாணம்  கொள்க.  என்பதாம்.   எவர்  அஞ்சினும்   யான்
போருக்கு அஞ்சிலேன் என்கிறான். அஞ்சு முகத்தவன் - சிவபிரான்.

                                                   (8)

7735.வெம்மைப் பொரு தானவர் மேல் வலியோர்-
தம்மைத் தளையில் கொடு தந்திலெனோ?
உம்மைக் குலையப் பொரும் உம்பரையும்
கொம்மைக் குய வட்டணை கொண்டிலெனோ?