பக்கம் எண் :

700யுத்த காண்டம் 

8813.‘அழியுங்கால் தரும் உதவி, ஐயனே!
மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே?
பழியும் காத்து, அரும் பகையும் காத்து, எமை
வழியும் காத்தனை; நம் மறையும் காத்தனை.
 

ஐயனே!  அழியுங்கால் தரும் உதவி  மொழியுங்கால் - ‘ஐயனே!
எல்லோரும்   அழியுங்காலத்தில்  நீதந்த   உதவியைச் சொல்லுமிடத்து;
தரும் உயிரின் முற்றுமோ? - இப்போது தரப்பட்ட உயிரோடு முற்றுப்
பெற்றதாகுமோ  (ஆகாது); பழியுங் காத்து அரும் பகையும் காத்து -
(நீ தந்த உதவியால்)  எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து; அரிய
எம்பகையும்  வலிமிக்கு  உலகை  அழிக்காமல் காத்து; எமை  வழியும்
காத்தனை  நம்  மறையும்  காத்தனை
 -  எம்மரபையும் அழியாமல்
காத்து நமது வேத நெறியையும் அழியாமல் காப்பாற்றினாய்’.
 

‘ஐயனே!     நீ எமக்கு உயிர்மட்டுமா தந்துளாய்? பழி, பகை, வழி,
மறை  ஆகிய அனைத்தையுமல்லவா காப்பாற்றியுள்ளாய்’,  என்கிறான்’.
பழி   -  சீதையை  மீட்காமை,  முனிவர்க்குக்  கொடுத்த   வாக்கைக்
காப்பாற்றாமை.  பகை - வலிமைமிகுந்து உலகை  அழிக்காமை. வழி -
இலக்குவன்   இறக்கவே   இராமனும்,    தொடர்ந்து  பரதசத்துருக்கர்
ஆகியோர் இறக்கச் சூரியகுலம் வழியற்றுப் போதல்.
 

                                                (111)
 

8814.‘தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே,
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட, வான்
ஏழும் வீயும்; என் பகர்வது?-எல்லை நாள்
ஊழி காணும் நீ, உதவினாய்அரோ!
 

தாழ்வில்     இங்கு இறைப்பொழுது தக்கதே - எனக்கு நேர்ந்த
இத்தாழ்வும்  இவ்விடத்தில்   இன்னும்  சிறிது  போழ்து (நீக்கப்படாமல்)
தாழ்ந்திருக்குமாயின்;  வாழி  எம்பிமேல்  அன்பு  மாட்ட  - நெடிது
வாழ்வதற்குரிய என் தம்பி  மேல்  எனக்கிருக்கும்  அன்பானது அழிக்க;
வான்  ஏழும்   வீயும்;   என்   பகர்வது   -   மேலேழுகங்களும்
அழிந்திருக்கும்  என்ன  சொல்வது? ஊழி எல்லை நாள் காணும் நீ -
ஊழியின்   இறுதி  நாளையும்  காணப்போகின்ற   நீ;  உதவினாய்  -
அவ்வுலகங்கள் அழியாமலிருக்க உதவி செய்தாய்.
 

அரோ - அசை.
 

                                                 (112)