பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 701

8815.

‘இன்று வீகலாது, எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய்;
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது, நீ
என்றும் வாழ்தியால் இனிது, என் ஏவலால்!’
 

இன்று  வீகலாது எவரும் எம்மோடு - (மேகநாதன் பிரமாத்திரம்
ஏவிய)  இன்று  எவரும் இறவாது எம்மொடு; நெடிது நின்று வாழுமா
நல்கினாய்
- நெடிது காலம் நின்று வாழுமாறு உயிர்  நல்கினாய்; என்
ஏவலால் நீ  ஒன்றும்   இன்னல்  நோய்   உறுகிலாது
  -  என்
கட்டளையினால்  நீ சிறிதும்  துன்பநோய் அடையாது; என்றும் இனிது
வாழ்தியால்
- என்றும் இனிது வாழ்வாயாக.
 

                                                 (113)
 

8816.மற்றையோர்களும், அனுமன் வண்மையால்,
பெற்ற ஆயுளார், பிறந்த காதலார்,
சுற்றும் மேவினார்; தொழுது வாழ்த்தினார்;
உற்றவாறு எலாம் உணரக் கூறினான்.
 

அனுமன் வண்மையால் பெற்ற ஆயுளார்  மற்றையோர்களும் -
அனுமனுடைய  வள்ளல்தன்மையினால்   ஆயுளைப்  பெற்றவர்களாகிய
மற்றவர்களும்; பிறந்த  காதலார்   சுற்றும்   மேவினார்  தொழுது
வாழ்த்தினார்
  -  அன்பு  மிக்கவர்களாய்   அவ்வனுமனைச்  சுற்றிக்
கொண்டு  தொழுது  அவனை  வாழ்த்தினார்கள்;  உற்றவாறு  எலாம்
உணரக்  கூறினான்
 -  அனுமனும் மருத்துமலையைக் கொண்டு வந்த
நிகழ்ச்சி எல்லாவற்றையும் அவர்கள் உணருமாறு கூறினான்.
 

                                                 (114)
 

                        மருத்துலையுடன் அனுமன் மீண்டு போதல்
 

8817.‘உய்த்த மா மருந்து உதவ, ஒன்னலார்,
பொய்த்த சிந்தையார், இறுதி பொய்க்குமால்;
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து, மீடியால்-வரம்பு இல் ஆற்றலாய்!’
 

வரம்பு  இல்  ஆற்றலாய்!  -  எல்லையற்ற  ஆற்றலை  உடைய
அனுமனே!;  உய்த்தமாமருந்து  உதவ  -  நீ  கொண்டு வந்த சிறந்த
மருந்து உதவுவதால்; பொய்த்த சிந்தையர் ஒன்னலார் இறுதி