கண்டான் - இளமையான நல்ல மயில் போன்ற சாயலை உடையமகளிரை நெடிதாய களியாட்டம் ஆடுமாறு செய்தான். |   (1) | 8820. | அரம்பையர், விஞ்சை மாதர், அரக்கியர், அவுணர் மாதர், குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர், இயக்கர் கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள், வரம்பு அறு சும்மையோர்கள், மயில்-குலம் மருள, வந்தார். | அரம்பையர், விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் - தேவமாதரும், வித்யாதரமகளிரும், அரக்கியரும், அசுரப் பெண்டிரும; குரும்பை அம் கொங்கை நாகர்கோதையர், இயக்கர் - குரும்பை போன்ற அழகிய தனங்களை உடைய நாககன்னியரும், இயக்க மகளிரும்;கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள் - கோது நீக்கிய கரும்பினும்இனிய சொல்லை உடையவர்களாகிய சித்தர் பெண்களும் ஆகிய; வரம்பு அறு சும்மையோர்கள் மயில் குலம் மருள வந்தார் - எல்லையற்ற கூட்டத்தினர் மயிற்குழாங்களும் மருட்சியுறுமாறு வந்தார்கள். | குரும்பை - மகளிர்தனத்திற்குவமை, "குவவின கொங்கை குரும்பை (திருக்கோவை - 108) கோது இல் கரும்பு - கோது - சக்கை. "கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி, மற்றதன் கோது போற் போகும் உடம்பு" (நாலடி - 34) கரும்பினும் இனிய சொல்லார்; "கன்னி நடக்கும் நடை கற்றாள் கரும்பு கசக்கும் மொழி பெற்றாள்" (பிரபு -உற்பத்தி - 57) |   (2) | 8821. | மேனகை, விசய வாட்கண் திலோத்தமை, அரம்பை, மெல்லென் தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி, முதலாம் தெய்வ வானக மகளிர் வந்தார்-சில் அரிச் சதங்கை பம்ப, ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட, ஆடி. |
|
|
|