| மேனகை விசய வாட்கண் திலோத்தமை அரம்பை - மேனகை, வெற்றி பெற்ற வாளைப் போன்ற கண்ணையுடைய திலோத்தமை, அரம்பை; மெல்லென் தேன் நகு மழலை இன்சொல் உருப்பசி - மென்மையாக ஒலிக்கின்ற, தேனையும் பழித்துச் சிரிப்பதற்குரிய, மழலையாகிய இனிய சொல்லினை உடைய ஊர்வசி; முதலாம் வானக தெய்வமகளிர் - முதலாயவானுலகத்துத் தெய்வமகளிர்; ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட - படகமும் முரசமும் சங்கும் முருடு என்னும் வாத்தியத்தோடு முழங்க; சில் அரிச் சதங்கை பம்ப ஆடி வந்தார் - தம் காலில் அணிந்த சிலவாகிய பரலை உடைய சதங்கைகள் ஒலிக்க ஆடிக்கொண்டே வந்தார்கள். | ஆனகம் - படகம்; ஒரு வகை வாத்தியம். முருடு - மத்தளம். “முரசியம்பின் முருடதிர்ந்தன” (சிலம்-1-46) என்றவிடத்து முருடு மத்தளமெனும் குறிப்புரை காண்க. |   (3) | 8822. | தோடு உண்ட சுருளும், தூங்கும் குழைகளும், சுருனின் தோய்ந்த ஏடு உண்ட பசும் பொன் பூவும், திலதமும், இலவச் செவ் வாய் மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச் செங்கண், காடு உண்டு புகுந்தது என்ன, முனிந்தது-கறை வெண் திங்கள். | தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் - பனந்தோட்டின் தன்மை பொருந்தியகாதணியாகிய பொற்சுருளும், தொங்குகின்ற குழைகளும்; சுருளின் தோய்ந்த ஏடுஉண்ட பசும் பொன் பூவும் திலகமும் - (ஐம்பாலில் ஒன்றாகிய) சுருள் என்ற முடிவகையில் அமைந்த இதழ் பொருந்திய பசும் பொன்னாலியன்ற பூவும், திலகமும்; இலவச் செவ்வாய் மூடுண்ட முறுவல் முத்தும் - இலவம் பூப்போன்ற சிவந்த வாயால் மூடுண்டு கிடக்கின்ற பற்களாகிய முத்தும்; முள்ளுண்ட முளரிச் செங்கண் காடுஉண்டு புகுந்தது என்ன - முட்கள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்தகண்ணும் ஆகியவற்றைக் கொண்ட (தனக்குப் பகையான முளரிக்காடு தன்னை மறைக்கும் வண்ணம்) காடு புகுந்துள்ளது என்ற காரணத்தால; கறைவெண்திங்கள் முனிந்தது - களங்கத்துடன் கூடய வெண்ணிறமான சந்திரன் வெகுண்டது. |
|
|
|