தோடு உண்ட சுருள் - பனந்தோட்டின் தன்மை பொருந்திய காதணி. சுருளில் தோய்ந்தபூ - ஐம்பால் முடிவகையில் ஒன்றான சுருளில் அமைந்த பூ. |   (4) | 8823. | முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும், மூரி ஒளிப் பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும், ஒண் பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர் கதிர்ப் பரப்பும், வீச, வளைத்த பேர் இருளும், கண்டோர் அறிவு என, மருளும் மாதோ. | முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண்நிலவும் - தோன்றுகின்ற செழுமையான ஒளித்திரளைக் கொண்ட (பெண்களின்) புன்சிரிப்பின் வெண்ணிறமான நிலவும்; மூரி ஒளிப்பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ். இளவெயிலும் - பெரிய ஒளிப்பிழம்பை வெளிப்படுத்துகின்ற அணிகலன்கள் வீசுகின்ற இளவெயிலும; ஒண் பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர்கதிர்ப் பரம்பும்வீச - ஒளிவாய்ந்த பொன்னைப் போன்று, விளக்கையும் விளக்குகின்ற அவர்தம் மேனியினது விளங்குகின்ற ஒளிக்கதிர்ப் பரப்பும் வீசுதலால்; வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என, மருளும் மாதோ- உலகத்தையே வளைத்துக் கொண்டிருந்த பெரிய இரவு இருளும், அப்பெண்களைக் கண்ட ஆடவர் அறிவு போல் மருண்டு நிலை கெடுவதாயிற்று. |   (5) | கள்ளுண்டார் நிலை | 8824. | நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி, முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி, பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். | நல்பெருங்கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி - நல்லதாகிய பெரிய கல்விச் செல்வத்தால் குற்றமற்றவழியைப் |
|
|
|