பக்கம் எண் :

 களியாட்டுப் படலம் 707

பொருந்தி;  முன்பயன்  உணர்ந்த  தூயோர் மொழியொடும் பழகி
முற்றி
 -  முற்காலத்து  அந்நெறியின்  பயனை உணர்ந்த தூயோர்தம்
உபதேச  மொழியோடு  பழகி  முதிர்ச்சியுற்று;  பின்பயன்  உணர்தல்
தேற்றாப் போதைபால் வஞ்சன்  செய்த
- பின்னால் அந்த உபதேச
மொழியினால்   உளதாம்பயனை   (உணரவேண்டி  இருக்க,  அதனை)
உணர்தல்  இல்லாத  பேதைபால்  வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை
என்ன  ஓடிக் கலந்தது கள்ளின் வேகம்
- கற்பனை, அப்பேதையின்
உள்ளத்தில்  விரைந்த நம்பப்பட்டு பரவுவது போலக்  கள்ளின் வேகம்
மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது.
 

நூலறிவோடு     கேள்வி   ஞானமும்   எய்தி   அதன்  பயனை
உணராதாசைப்  பேதை  என்றார்.  "ஓதியுணர்ந்தும்   பிறர்க்குரைத்தும்
தானடங்காப் பேதையிற் பேதையாரில்" (குறள்-834) என்பது காண்க.
 

                                                  (6)
 

8825.பல பட முறுவல் வந்து பரந்தன; பனித்த, மெய் வேர்;
இலவு இதழ் துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற;
கொலை பயில் நயன வேல்கள் கொழுங் கடை சிவந்த;
                                        கொற்றச்
சிலை நிகர் புருவம் நெற்றிக் குனித்தன; விளர்த்த செவ்
                                          வாய்.
 

பலபட  முறுவல்  வந்து   பரந்தன   மெய்வேர்   பனித்த -
(கள்ளருந்திய மகளிர்க்கு)   பல   வகையாகச்  சிரிப்பு  வந்து  பரவின.
உடம்பில்   வேர்வைத்  துளிகள்  தோன்றின;  இலவு   இதழ்துடித்த;
முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற
- இலவமலர் போன்று  சிவந்த
உதடுதுடத்தன; முல்லை அரும்பு போன்ற  பற்கள்  வெள்ளிய நிலவைச்
சொரிந்தன; கொலைபயில் நயன வேல்கள்  கொழுங்கடை சிவந்த -
(ஆடவரை)   வருத்துதலில்   பழகிய    கண்களாகிய   வேற்படையின்
செழுமையான ஓரங்கள்  சிவந்தன;   கொள்ளச்  சிலைநிகர்  புருவம்
நெற்றிக்குனித்தன செவ்வாய்விளர்த்த
  -   வெற்றி    பொருந்திய
வில்லை  நிகழ்த்த புருவங்கள் நெற்றியின் மீது வளைந்தன; சிவந்தவாய்
வெண்ணிறம் பெற்றன.
 

                                                   (7)
 

8826.கூந்தல் அம் பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல்
ஏந்து அகல்அல்குல் தேரை இகந்துபோய் இறங்க, யாணர்ப்