வெம்மைப் பொருதானவர் மேல் வலியோர் - கொடுமையாகப் போர் செய்கின்ற தானவரை விட வலிமையுடையவர்; தம்மைத் தளையில் கொடு தந்திலனோ - தம்மைத் தளையிட்டுப் பிணித்து வந்து (உன்னிடம்) கொடுத்திலனோ? உம்மைக் குலையப் பொரும் உம்பரையும் - உம்மையும் நடுங்குமாறு போர் செய்யும் (வலி படைத்த) தேவர்களையும்; கொம்மைக்குய வட்டணை - திரட்சியான வாளால் இடம் வலமாகச் சாரிதிரிந்து; கொண்டிலனோ - பொருது வெற்றி கொண்டிலனோ. |
கொம்மை - திரட்சி. குயம் - வாள், மார்பும் ஆம். வட்டணை கொள்ளுதல் - இடம் வலமாகச் சாரிதிரிந்து வெற்றி கொள்ளுதல், சுழல அடித்தலும் ஆம். குயவட்டணை கொள்ளல் என்பதற்கு மார்பில் தாளம் போட்டிலனோ என உரைப்பாரும் உளர். |
(9) |
7736. | ‘காய்ப்புண்ட நெடும் படை கை உளதாத் தேய்ப்புண்டவனும், சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும், அவர் சொல் வலதால் ஏய்ப்புண்டவனும், என எண்ணினையோ? |
காய்ப்புண்ட நெடும் படைகை உளதாத் - காய்ச்சிக் கூர்மையாக அடிக்கப் பெற்ற நெடிய படைக்கலங்கள் தன் கையில் உள்ளதாக; தேய்ப்புண்டவனும் - தரையில் தேய்க்கப் பட்டு இறந்த அக்ககுமாரனும்; சில சில் கணையால் ஆய்ப்புண்டவனும் - சில வலியற்ற அம்புகளால் உயிரொடுங்கியவனான கும்பகருணனும்; அவர் சொல் வலதால் ஏய்ப்புண்டவனும் - இராம இலக்குவரது புகழின் வல்லமையால் ஏய்க்கப்பட்டவனான வீடணனும்; என எண்ணினையோ - என்று (என்னை) எண்ணினாயோ. |
தேய்ப்புண்டவன் - அனுமனால் தரையில் தேய்க்கப்பட்டு உயிரொடுங்கிய அக்ககுமாரன். இச்செயல் சுந்தர காண்டத்தில் அக்ககுமாரன் வதைப் படலத்தில் (படலம் 10) கண்டது. ஆய்ப்புண்டவன் - உயிரொடுங்கியவனான கும்பகருணன். சொல்வலதால் - புகழின் வல்லமையால் வலத்தால் வலதால் என்பது. ஏய்ப்புண்டவன் - ஏய்க்கப்பட்டவனான வீடணன். |
(10) |
அதிகாயன் வஞ்சினம் கூறி, போருக்குச் செல்லல் |
7737. | ‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து, அவனைக் |