பக்கம் எண் :

710யுத்த காண்டம் 

வங்கியம் வகுத்த   கானம்   வயங்கிய   மழலை   வாயர் -
புல்லாங்குழல்  வழங்கும்  இன்னிசை தன்னிடம் விளங்குகின்ற மழலைச்
சொல்லைப்  பேசும்   வாயினை  உடைய  மகளி்ர்;  மயக்கம்  வீங்க
-  மயக்கம் ஏற்பட்டதனால்;    சங்கையில்    பெரும்பாண்   உற்ற
நிறத்துறை  நிரம்பித்தள்ள
  -   குற்றமற்ற    பெரும்   பாணர்கள்
கண்டறிந்த விளக்கமானதுறை மிக்கு மாறுபட்டுப்போக; சிங்கல்    இல்
அமுதினோடும்   புளி  அளாம்  தேறல்  என்ன
- சுவை குன்றாத
இனிய   அமிழ்தத்தோடு    புளிப்புச்  சுவை   விரவிய   கள்ளினைக்
கலந்தாற்போல; வெங்குரல் எடுத்தபாடல் விளித்தனர்  -  கடுங்குரல்
எடுத்துப்பாடும் பாடலைப் பாடினர்.
 

                                                  (11)
 

8830.ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன,-
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை
                                   சான்றோர்,-
மான் அவர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி, தேரை அபிநயத்து இயற்றி உற்றார்.
 

கண்டார்க்கு  இந்திர  சாலம்  என்ன  -  (தம்  அபிநயத்தைக்)
கண்டோர்க்கு  இந்திர  சாலவித்தை  போலத்தோன்றும்படி;  ஏனைய
பிறவும்  தான் அவை  உருவில்  தோன்றும்
 -  தாமல்லாத  பிற
உயிர்களாகிய  அவையும்  தம்  உருவில்  தோன்றுமாறு;  பாவனைத்
தன்மை  சான்றோர்
 -  நடிக்கும்  பாவனைத் தன்மை மிக்கோராகிய
நாடக மகளி்ர்; மான்  அமர்  நோக்கினாரை  மைந்தரைக்காட்டி -
மான்  போன்ற  கண்ணினை  உடைய  பெண்டிரையும  ஆடவரையுங்
காட்டி, (சைகையால்  அவர்களைப்  போல்  அபிநயிக்கப்  போவதாகக்
குறித்து); வாயால் ஆனையை விளம்பி தேரை அபிநயித்து இயற்றி
உற்றார்
- (அதைமறந்து) வாயினால் ஆனையைக் காட்டப் போவதாகக்
கூறிவிட்டு    (அதையும்    மறந்து)     அபிநயிக்கும்போது   தேரை
அபிநயித்துக் காட்டினார்கள்.
 

                                                 (12)
 

8831.அழுகுவர்; நகுவர்; பாடி ஆடுவர்; அயல் நின்றாரைத்
தொழுகுவர்; துயில்வர்; துள்ளித் தூங்குவர்; துவர் வாய்
                                     இன் தேன்