பக்கம் எண் :

 களியாட்டுப் படலம் 711

ஒழுகுவர்; ஒல்கி ஒல்கி, ஒருவர்மேல் ஒருவர் புக்கு,
முழுகுவர், குருதி வாட் கண் முகிழ்த்து, இடை, மூரி போவர்.
 

அழுகுவர்;    நகுவர்; பாடி ஆடுவர்; - (கள்ளுண்டமயக்கத்தால்)
அழுவார்கள்;  பின்பு  உடனே   சிரிப்பார்கள்;   பின்பு விரும்பியாங்கு
பாடிக்கொண்டு  ஆடுவார்கள்;  அயல்   நின்றாரைத்   தொழுகுவர்
துயில்வர்;  துள்ளித்தூங்குவர்
- பின்பு அருகில் நின்றவர்களைக் கை
கூப்பித்  தொழுவார்கள்;  உடனே  உறங்குவார்கள்;  உடனே  துள்ளி
எழுந்து சோர்வார்கள்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர் ஒல்கி ஒல்கி
ஒருவர் மேல் ஒருவர்புக்கு முழுகுவர்
- சிவந்தவாயில் உள்ள இனிய
தேன்  போன்ற  உமிழ்நீரை  ஒழுகவிடுவர், உடனே தளர்ந்து தளர்ந்து
ஒருவர்மேல் ஒருவர்புகுந்து  படிவார்கள்; குருதி வாட்கண் முகிழ்த்து,
இடை, மூரிபோவர்
 -  இரத்தம்  போன்று   சிவந்த  ஒளி  வாய்ந்த
கண்ணை மூடிக்கொண்டு நெட்டை முரிப்பார்கள்.
 

                                                 (13)
 

8832.உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார், ‘உள்ளத்து
                                       உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே; அது களியாட்டம் ஆக,
செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திரு மறை
                                முனிவர்க்கேயும்,
மயிர்ப்புறம்தோறும் வந்து பொடித்தது, காம வாரி.
 

‘உள்ளத்து    உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்’ என்றே - ‘எம்
உள்ளத்தி்ல்   உள்ள   கருத்து     (புணர்ச்சி   விருப்பமே  என்பது)
தெளிவாகவே  தெரிந்து    கொள்ளுங்கள்’   என்று;   உயிர்ப்புறத்து
உற்றதன்மை  உணர்த்தினார்கள்
  -   தம்  உடம்பில்  பொருந்திய
செய்கையால்  அப்பெண்கள்  உணர்த்தினார்கள்;  அது  களியாட்டம்
ஆக
 -  அக்குறிப்பு  களியாட்டமாக  வெளிப்பட;  செயிர்ப்பு  அறு
தெய்வச்  சிந்தைத்  திருமறை   முனிவர்க்கேயும்
 -  காமவெகுளி
மயக்கங்களின்  நீங்கிய  சிந்தையரான  தெய்வத்  தன்மை  பொருந்திய
சிறந்த வேதமுணர்ந்த முனிவர்க்கும்; மயிர்ப்புறம் தோறும் வந்து காம
வாரி   பொடித்தது
 -  மயிர்க்கால்  தோறும்  காம  உணர்ச்சியாகிய
வெள்ளம் தோன்றியது.
 

                                                 (14)