8833. | மாப் பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங் குவளை வாட் கண் சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் கிடை வெண்மை சேர, காப்பு உறு படைக் கைக் கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி, பூப் பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர் தன்மை போன்ற. | மாப்பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங்குவளைவாட்கண் - வண்டு பிறழ்வது போன்ற நோக்கத்தை உடைய கள்ளுண்ட பெண்டிர்தம்கரிய நீண்ட குவளை மலர் போன்ற ஒளி பொருந்திய கண்கள்; சேப்புற அரத்தச் செவ்வாய்ச் செங்கிடை வெண்மை சேர - சிவக்கப்பெற்ற தன்மையும் செங்கழு நீர் மலர் போன்ற சிவந்த வாயாகிய செங்கிடை வெண்ணிறம் சேரப் பெற்ற தன்னையும்; கைப்படை காப்புஉறு கள்வநிருதர்க்கு ஓர் இறுதி காட்டி - (அறத்தையன்றி) தம்கையகத்துள்ள படைக்கலன்களையே காவலாகக் கொண்ட வஞ்சகராகிய அரக்கர்க்கு நேரவிருக்கின்ற ஓரழிவினை முன்னர்த் தெரிவித்து; பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர்தன்மை போன்ற - மலர்கள் வேறுபட்டு வண்ணம் வேறாக விளங்கியதோர் தன்மை போன்று தோன்றின. |   (15) | 8834. | கயல், வரு காலன் வை வேல், காமவேள் கணை, என்றாலும், இயல் வருகிற்கிலாத நெடுங் கணார், இணை மென் கொங்கைத் துயல்வரு கனக நாணும், காஞ்சியும், துகிலும், வாங்கி, புயல் வரு கூந்தல் பாரக் கற்றையின் புனையலுற்றார். | கயல் வருகாலன்வைவேல் காமவேள்கணை என்றாலும் - கெண்டை மீனும், உயிரைக் கொள்ளவருகின்ற எமன் கையிலுள்ள கூரிய வேற்படையும், மன்மதனுடைய கணையும் என உவமை கூறினும்; இயல் வருகிற்கிலாத நெடுங்கணார் - ஒப்பமை அமையாத நீண்ட கண்களையுடைய பெண்கள்; இணைமென் கொங்கைத் துயல்வருகனக நாணும் காஞ்சியும், துகிலும் - தம் இணையான மென்மை பொருந்திய தனங்களின் மேல் |
|
|
|