பக்கம் எண் :

 களியாட்டுப் படலம் 713

அசைகின்ற    பொன் சரட்டையும், மேகலையையும், புடவையையும்;
வாங்கி, புயல்வரு கூந்தல் பாரக் கற்றையின்  புனையலுற்றார் - கையில்
வாங்கி  மேகம் போன்ற கூந்தலாகிய  கனமுடைய கற்றையில் அணியத்
தொடங்கினார்கள்.
 

                                                  (16)
 

                       வானரர் ஆர்ப்பொலியும் அதன் விளைவும்
 

8835.முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல்
                                          நல்லார்,

இத் தன்மை எய்த நோக்கி, அரசு வீற்றிருந்த எல்லை,
அத் தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை
மத்தன் மெய் மயங்க வந்து, செவிதொறும் மடுத்தது அன்றே.
 

முத்து அன்மை மொழியில் ஆகா முகிழ் இளமுறுவல் நல்லார்
- முத்து  அல்ல  எனக்கூறமுடியாத  (முத்துக்களே எனத்தகும்) பற்கள்
தோன்ற  முகிழ்க்கின்ற  புன்முறுவலையுடைய  பெண்கள்; இத்தன்மை
எய்த நோக்கி அரசு  வீ்ற்றிருந்த  எல்லை
 -  கள்  மயக்கத்தால்
இத்தன்மை    அடைதலை   விருப்பத்தோடு   நோக்கிக்   கொண்டு
(இராவணன்) அரசு  வீற்றிருந்தபோது; அத்தன்மை அரியின் சேனை
ஆர்கலி  ஆர்த்த   ஓசை
 -  அங்ஙனம்  (அனுமான்  கொணர்ந்த
மருந்தால்) உயிர் பெற்றெழுந்த வானரசேனையாகிய கடல் ஆரவாரித்த
ஓசை;மத்தன் மெய்மயங்க   வந்து   செவிதொறும்  மடுத்தது  -
காமமயக்கம்   கொண்ட  அவ்விராவணன்  உடல்  தளருமாறு  வந்து
அவன் செவிகள் தோறும் நுழைந்தன.
 

அன்று, ஏ - அசைகள்.
 

                                                 (17)
 

8836.ஆடலும், களியின் வந்த அமலையும், அமிழ்தின் ஆன்ற
பாடலும், முழவின் தெய்வப் பாணியும், பவள வாயார்
ஊடலும், கடைக்கண் நோக்கும், மழலை வெவ் உரையும்,
                                       எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த-ஆர்ப்பு ஒலி வருதலோடும்.