பவளவாயார் ஆடலும், அமிழ்தின் ஆன்ற பாடலும் - பவளம் போன்ற வாயினை உடைய பெண்களின் ஆடலும், அமுதினும் இனிதாய் அமைந்த அவர் பாடலும்; முழவின் தெய்வப்பாணியும் - அப்பாடலுக்கேற்ற மத்தளத்தின் தெய்வத்தன்மை வாய்ந்த ஓசையும்; களியின் வந்த அமலையும் - அவற்றைக் காண்போரின் களிப்பால் வந்த ஆரவாரமும்;ஊடலும், கடைக்கண் நோக்கும் - (அம்மகளிர் மீது ஆசை கொண்டு நோக்குவோர்க்கு அம்மகளிர் காட்டும்) ஊடலும், (அவ்வூடலால் அவ்வாடவர் வருத்தம் கண்டு இரங்கி அம்மகளிர்தம் இசைவைத் தெரிவிக்கும்) கடைக்கண் நோக்கமும்; மழலைவெவ் உரையும் எல்லாம் - அவ்வாடவரிடத்து அம்மகளிர் பேசும் காம வெப்பத்தை மிகுவிக்கும் மழலைத் தன்மையுடைய உரையும் ஆகிய அனைத்தும்;ஆர்ப்பு ஒல வருதலோடும் வாடல் மென்மலரே ஒத்த - வானரர்தம் ஆரவாரப்பேரொலி வந்தவுடன் வாடிய மலர்போலப் பொலிவழிந்து போயின. | (18) | 8837. | தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க, துறு சுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க, செறி கழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது அன்றே- எறி கடல் கடைந்த மேல்நாள், எழுந்த பேர் ஓசை என்ன. | தறி பொருகளி நல்யானை சேவகம் தள்ளி ஏங்க - கட்டுத்தறியையும் முறிக்கின்ற மதக்களிப்பினையுடைய நல்ல யானைகள் தாம் படுத்த விடங்களில் திடுக்குற்று வருந்தவும்; துறுசுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க - நெருங்கிய பிடரி மயிரினை உடைய குதிரைகள் துணுக்குற்றுச் சோரவும் காலாள் வீரராகிய அரக்கர்கள் அஞ்சவும்; ஏறிகடல் கடைந்த மேல்நாள் எழுந்தபேர் ஓசை என்ன - அலைகள் வீசுகின்ற பாற்கடலைக் கடைந்த முந்காலத்து எழுந்த பேரொலி போல; செறிகழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது - வீரக்கழல் அணிந்த இராமஇலக்குவரின் தெய்வத்தன்மை வாய்ந்த வில்லினின்றும் நான் ஒலி பிறந்தது. அன்றெ - அசை. | நால்வகைப் படையுள் தேர்ப்படை தனக்கென வீரம் உடையதன்று, "தானை, யானை குதிரையென்ற நோனார் உட்கு மூவகை |
|
|
|