பக்கம் எண் :

 களியாட்டுப் படலம் 715

நிலையும்"     (தொல்-பொருள். புறத்12)  இதற்கு,   "குதிரையானன்றித்
தேர்தானே   செல்லாமையின்   தேர்க்கு   மறம்   இன்றென்று  அது
கூறாராயினர்" என்ற நச்சினார்க்கினியர் குறிப்பும் இங்கு காணத்தகும்.
 

                                                 (19)
 

8838.முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர், முழுக் கண்
                                        வேலால்
குத்துவார், கூட்டம் எல்லாம் வானரக் குழுவின் தோன்ற,
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற, வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும், அந் நாள், பகல் ஒத்தது இரவும்,
                                         பைய.
 

முழுக்கண் வேலால் குத்துவார் - இலக்கணம் முழுமையும் பெற்ற
வேற்படைபோன்ற    கண்களால்  குத்துகின்றவர்களாகிய;  முத்துவாள்
முறுவல் மூரல்  முகத்தியர்   கூட்டம்  எல்லாம்
- முத்துக்களைப்
போன்ற பற்களைக் காட்டி ஒளி பொருந்திய  சிரிப்பினைச்   சிந்துகின்ற
நகைமுகத்தினை   உடைய   களியாட்டு    மகளிர்   கூட்டமெல்லாம்;
வானரக்குழுவின்   தோன்ற   -  இப்போதுவானரக்கூட்டம்   போல
(வெறுக்கத்தக்கனவாகத்)   தோன்றவும்;   மத்துவார்கடலின்  உள்ளம்
மறுகுற
 - மந்தரமலையாகிய மத்தாற் கடையப்  பெற்ற  கடலைப்போல
உள்ளம்   கலங்கவும்;  வதனம்  என்னும்  பத்துவாள்  மதிக்கும் -
இராவணனது  முகம்  என்கின்ற  பத்து  ஒளி  வாய்ந்த  மதிகளுக்கும்
அந்நாள்  பகல்   ஒத்தது   இரவும்    பைய - அந்நாள்   இரவு
(பொலிவழியச் செய்த) பண்பினால் பகலை ஒத்தது.
 

                                                 (20)
 

8839.ஈது இடை ஆக, வந்தார், அலங்கல்மீது ஏறினார்போய்
ஊதினார், வேய்கள், வண்டின் உருவினார், உற்ற
                                     எல்லாம்;
‘தீதுஇலர், பகைஞர்’ என்ன, திட்கென்ற மனத்தன்,
                                     தெய்வப்
போது உகு பந்தர்நின்று, மந்திரத்து இருக்கை புக்கான்.