பக்கம் எண் :

716யுத்த காண்டம் 

ஈது இடைஆக  வேய்கள்  வண்டின்  உருவினார்  வந்தார் -
இந்நிகழ்ச்சிக்கு  இடையே  ஒற்றர்கள்  வண்டின் உருவம் உடையவராய்
வந்து;அலங்கல் மீது ஏறினார்போய் உற்ற  எல்லாம்  ஊதினார் -
இராவணன்   மாலைமீது  ஏறிப்   போய்ப்  போராட்டத்தில்  நிகழ்ந்த
எல்லாவற்றையும்  (அவன்  செவியில்)  கூறியவர்களாய்; ‘பகைஞர் தீது
இலர்’  என்ன  திட்கென்ற மனத்தன்
- ‘பகைவர்கள் மரணமென்னும்
தீது  இலராயினர்’  என்று கூற ‘திக்’கென்ற மனத்தனாகிய  இராவணன்;
தெய்வப்போது உகுபந்தர் நின்று மந்திரத்து  இருக்கை புக்கான் -
கற்பகம்   முதலிய   தெய்வமலர்கள்   சிந்துகின்ற  பந்தலில்   இரந்து
ஆலோசனைக்குரிய மண்டபத்தில் புகுந்தான்.
 

                                                 (21)