பக்கம் எண் :

718யுத்த காண்டம் 

மந்திரர்   எவரும்  வந்து,  மருங்கு  உறப்படர்ந்தார்  -  ஏற்றுக்
கொள்ளத்தக்க ஆலோசனையாளர்  எவரும்,  மற்றவர்களும் வந்து தன்
பக்கத்தில்   நெருங்கிச்   சேர்ந்தார்கள்;  பட்ட  அந்தரம்  முழுதும்
அனையவர்க்கு  தானே  அறியச்  சொன்னான்
- (அப்போதுதான்)
பட்ட துன்பம் யாவற்றையும் அச்சபைக்கு  வந்திருந்த  அனைவருக்கும்
தானே தெளிவாக எடுத்துச் சொன்னான். (இராவணன்).
 

                                                   (1)
 

                                        மாலியவான் அறிவுரை
 

8841.‘நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட, நணுகும் அன்றே,
வெங் கொடுந் தீமைதன்னால் வேலையில் இட்டிலேமேல்?
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு
                                            இல்லை,
பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால்.
 

வெங்கொடும்   தீமை தன்னால் வேலையில்  இட்டிலேமேல் -
(அதுகேட்ட  மாலியவான்  இராவணனை  நோக்கி)  மிகக் கொடிய தீய
எண்ணத்தால்  கடலில்  கொண்டு  போய்  போடாமல் இருந்திருந்தால்;
நம் கிளை உலந்தது எல்லாம்   உய்ந்திட  நணுகும்  அன்றே? -
அழிந்து போன நம் சேனை   முழுதுங்    கூட    உயிர்   பெற்றெழ
வாய்ப்பிருந்திருக்கும் அல்லவோ? பங்கயத்து அண்ணல் மீளாப் படை
பழுதுற்ற    பண்பால்
   -   தாமரைமலரில்    வீற்றிருப்பவனாகிய
பிரமதேவனின்  மீட்கமுடியாத  படையாகிய  பிரமாத்திரமும்   வீணான
தன்மையால்; இனி இங்கு உள எல்லாம் மாள்தற்கு வரும் இடையூறு
இல்லை
 -  இனிமேல்  இங்குள்ள  யாவும்  இறப்பதைத்  தடுக்கவரும்
இடையூறு கிடையாது.
 

இதுமுதல்   ஏழு   பாடல்களில்அறிவுரை  கூறுகிறான்  என்பதனைப்
பின்வரும் 8847 ஆம் பாடல் கொண்டு அறிக.
 

                                                   (2)
 

8842.‘இலங்கையின்நின்று, மேரு பிற்பட, இமைப்பில் பாய்ந்து,
வலம் கிளர் மருந்து, நின்ற மலையொடும், கொணர
                                       வல்லான்