| அலங்கல் அம் தடந் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்- கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால். | கண்ட ஆற்றால் - (நாம் நூல்களால்) கண்ட நெறியால் (பார்க்கும்போது); இலங்கையின் நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து - இலங்கையினின்றும் மேருமலையும் பிற்பட இமைப்பொழுதில் பாய்ந்து சென்று; வலம்கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் - வலிமை விளங்கும் மருந்தினை அது நின்ற மலையோடும் கொணரவல்லவனாகிய; அலங்கல் அம்தடந்தோள் அண்ணல் அனுமனே - மாலையணிந்த அழகிய பெரிய தோளினையுடைய பெருமை மிக்க அனுமனே; உலகுக்கு எல்லாம் கலங்கலில் காரணம் ஆதல் வேண்டும் - உலகுக்கெல்லாம் கலங்குதல் இல்லாத காரணப் பொருளாகிய கடவுள் ஆதல் வேண்டும். | (6) | 8843. | ‘நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப் பாரினில் கிழிய வீசின், ஆர் உளர், பிழைக்கற்பாலார்? போர் இனிப் பொருவது எங்கே? போயின அனுமன், பொன் மா மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர்மேல் விடும் எனின், விலக்கல் ஆமோ? | இலங்கையாய் நின்ற குன்றை நீரினைக் கடக்க வாங்கி - இலங்கை நகராக நின்றுள்ள குன்றினை, அதனைச் சூழ்ந்துள்ள கடல் நீரினைக் கடக்குமாறு பறித்து எடுத்து; பாரினில் கிழிய வீசின் பிழைக்கற் பாலார், ஆர் உளர்? - பூமியின் மேல் கிழியுமாறு எறிவானாயின், உயிர் பிழைத்தற்குரியோர் இங்கு யார் உளர்? போர் இனிப்பொருவது எங்கே? போயின அனுமன் - (அனுமன் அங்ஙனம் செய்தால்) இனிய போர் செய்வது எங்கே? மருத்துமலையை வைத்துவிட்டு வரப் போயுள்ள அனுமன்; பொன்மா மேருவைக் கொணர்ந்து இவ் ஊர்மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ? - பொன்மயமான மேருமலையைக் |
|
|
|