பக்கம் எண் :

72யுத்த காண்டம் 

கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்,
நம்பிக்கு ஒரு நன் மகனோ, இனி நான்?

உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் - உன் தம்பியின் உயிருக்கு இறுதி
செய்தவனான; ஒருவன் தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து - ஒருவனாகிய
(இராமனின்)   தம்பியின்   உயிருக்கு   அழிவு   செய்து;   அவனைக்
கம்பிப்பது  ஓர் வன்துயர் கண்டிலனேல்
- அவனுக்கு நடுக்கம் தரும்
ஒப்பற்ற  துன்பத்தைச்  செய்யாமல்  போவேன்  ஆயின்;  இனி  நான்
நம்பிக்கு  ஒரு  நன்மகனோ
 - இனி நான் ஆடவரிற் சிறந்த உனக்கு
ஒப்பற்ற நல்ல மகனாவேனோ?

கம்பித்தல்  -  நடுங்குதல்.  நம்பிக்கு  -  முன்னிலையில்  படர்க்கை
வந்த வழுவமைதி.

"இன்னது பிழைப்பின் இதுவாகியர் எனத்
துன்னரும் துப்பின் வஞ்சினத்தானும்"

(தொல்   -  புறத்)  என்றபடி  அதிகாயனின்  இக்கூற்று  வஞ்சினக்
காஞ்சி என்ற புறத்துறையின் பாற்படும்.

                                                   (11)

7738.‘கிட்டிப் பொருது, அக் கிளர் சேனை எலாம்
மட்டித்து, உயர் வானரர் வன் தலையை
வெட்டித் தரை இட்டு, இரு வில்லினரைக்
கட்டித் தருவென்; இது காணுதியால்.

கிட்டிப்  பொருது - நெருங்கிப் போர் செய்து;  அக்கிளர் சேனை
எலாம்  மட்டித்து
 -  அந்த  (கும்பகருணன்  மரணத்தால்)  கிளர்ச்சி
கொண்டுள்ள  குரங்குப்  படையை  எல்லாம் அழித்து;  உயர் வானரர்
வன்   தலையை வெட்டித்   தரை   இட்டு
  -  சிறந்த   வானரத்
தலைவர்களின்   வலிய   தலைகளை  எல்லாம்  வெட்டித்   தரையில்
போட்டு;  இரு    வில்லினரைக்   கட்டித்   தருவென்   -   இரு
வில்லேந்திகளான    இராம   லக்குவரைக்   கட்டிக்கொண்டு    வந்து
தருவேன்;  இது  காணுதியால்  -  இது  நடைபெறப்  போகிற செயல்
இதனை நீ காண்பாயாக.

மட்டித்தல்  -  அழித்தல்.  பிசைதல்  எனினுமாம்.  ஆல்  - அசை.
காணுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று.

                                                   (12)

7739.

‘"சேனைக் கடலோடு இடை செல்க" எனினும்,
யான் இப்பொழுதே, "தனி ஏகு" எனினும்