கொண்டுவந்து இவ்விலங்கையின் மேல் போடுவானாயின் அதனைத் தடுக்கவியலுமோ? |
(4) |
8844. | ‘முறை கெட வென்று, வேண்டின் நினைந்ததே முடிப்பன்; முன்னின், குறை இலை குணங்கட்கு; என்னோ, கோள் இலா வேதம் கூறும் இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமேதான்; அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா. |
முறைகெட வென்ற வேண்டின் முன்னின் நினைந்ததே முடிப்பன் - அனுமன் முறைகெடச் செய்ய விரும்பினார் முன்பு நாம்நினைந்ததையே தன் வன்மை மிகுதியால் செய்து முடித்துவிடுவான்; குணங்கட்கு குறை இலை - ஆனால், குணங்கட்கு அவனிடத்துக் குறையில்லை; கோள் இலா வேதம் கூறும் இறைவர்கள் மூவர் என்பது என்னோ - குற்றமில்லாத வேதங்கள் சொல்லும் கடவுளர்கள்மூவரே என்பது என்ன? எண் இலார் எண்ணமே தான் - (ஆராய்ந்து பார்த்தால்) சிந்தனை இல்லாதவர்களின் எண்ணமே ஆம்!அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா! - ஒலிக்கின்ற வீரக்கழலை உடைய அனுமனோடு முதற்கடவுளர் நால்வரே ஆவார். |
(5) |
8845. | ‘இறந்தவர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம்ஆகின், உள்ளேம்; உய்ந்தனம், பிழைக்கும் பெற்றி மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ் அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும், ஐய! |
இறந்தவர் இறந்து தீர - (போரில்) இறந்தவர்கள் இறந்தவர்களே ஆக! உள்ளேம் இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உய்ந்தனம் - இறவாது உள்ள நாம், புதியதொரு பிறவியில் வந்து பிறந்தனம் போன்று உய்ந்திருக்கின்றோம்; பிழைக்கும் பெற்றி மறந்தனம் - உயிர் பிழைத்து வாழும் தன்மையை இதுவரையில் மறந்திருந்தோம்; எனினும் ஐயா! இன்னம் சனகியை மரபின் ஈந்து - |