பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 721

என்றாலும்,      இனியேனும்    ஐயனே!     சீதையை    முறைப்படி
கொடுத்துவிட்டு; அவ் அறம்   தரு   சிந்தையோரை  அடைக்கலம்
புகுதும்
- அந்தத் தரும நெறி செல்லும் சிந்தையராகிய இராமலக்குவரை
அடைக்கலம் புகுவோமாக.
 

இதுவரை   நாம் உயிரோடிருப்பதே பெரிதென்பான் ‘உள்ளேம் இனி
ஒரு  பிறவி  வந்து  பிறந்தனம் ஆகின் உய்ந்தனம்’  என்றான்.  இராம
இலக்குவர்     சீதையைக்     கொடுத்துவிட்டால்   இன்னும்   நம்மை
உயிர்கொண்டு   பிழைக்க  அனுமதிக்கும்   அருளாளர்கள் என்பதனை
‘அறம்தருசிந்தையோர்’ என்பதனால் குறித்தான்.
 

                                                 (6)
 

8846.’வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து, வாரி
வேலையை வென்று, கும்பகருணனை வீட்டினானை,
ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ, அமரின்
                                   வெல்வார்?-
சூலியைப் பொருப்பினோடும் தூக்கிய விசயத் தோளாய்!
 

சூலியைப் பொருப்பினோடும்   தூக்கிய  விசயத்  தோளாய் -
சூலப்படையை   உடைய    சிபெருமானை   கயிலையினோடும்  தூக்கி
வெற்றி   பொருந்திய  தோள்களை  உடையவனே!  வாலியை  வாளி
ஒன்றால்  வானிடைவைத்து
 - வாலியை அம்பு  ஒன்றினால் கொன்று
விண்ணுலகத்திற்கு     அனுப்பிவிட்டு;      வேலையை     வென்று
கும்பகருணனை  வீட்டினானை
 - நீர் நிறைந்த கடலைச் சேது  கட்டி
வென்று,  கும்பகருணனைக்  கொன்றவனாகிய   இராமனை;  ஆலியின்
மொக்குள்   அன்ன    அரக்கரோ,     அமரின்    வெல்வார்?
- மழைதுளியால் நீரில்  தோன்றும்  மொக்குளைப்  போன்று  விரைந்து
அழியத் தக்க அரக்கரோ வெல்ல வல்லார்?
 

‘நீ  கயிலையைத் தூக்கிய ஆற்றலுடையவனாயினும் நின் வலிமைக்கு
மேற்பட்ட    மூன்று    செயல்களைச்  செய்து  முடித்தவன்  இராமன்
என்கிறான் மாலியவான்.
 

                                                   (7)
 

8847.‘மறி கடல் குடித்து, வானை மண்ணொடும் பறிக்க வல்ல
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர்; இலங்கை ஊரும்,