| சிறுவனும் நீயும் அல்லால், ஆர் உளர், ஒருவர் தீர்ந்தார்? வெறிது, நம்வென்றி’ என்றான், மாலி, மேல் விளைவது ஓர்வான். | மறிகடல் குடித்து வானை மண்ணொடும் பறிக்க வல்ல - அலைகடல் நீரையெல்லாம் குடித்து விட்டு ஆகாயத்தை மண்ணுலகத்தோடும் சேர்த்துப் பெயர்த் தெடுக்கவல்ல; எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர் - எறிதற்கு உரிய ஆயுதங்களை உடைய அரக்கர்ளெல்லாம் இறந்து பட்டனர்; இலங்கை ஊரும் சிறுவனும் நீயும் அல்லால் ஆர் உளர் ஒருவர்? தீர்ந்தார்? - இலங்கை என்கின்ற இந்த ஊரும் நின் சிறுவனாகிய இந்திரசித்தும் நீயும் அல்லாமல் வேறு ஒருவர் யார் உளர்? எல்லோரும் இறந்து பட்டனர்; ‘நம்வென்றி வெறிது என்றான் மாலிமேல் விளைவது ஓர்வான் - (ஆகவே) நம் வெற்றி யெல்லாம் வெறுமையானதே’ என்று கூறினான். மேலே விளையும் செயல் இத்தன்மைத் தாயிருக்கும் என்பதை உய்த்துணர்ந்த மாலியவான். | (8) | இராவணன் மறுப்புரை | 8848. | கட்டுரை அதனைக் கேளா, கண் எரி கதுவ நோக்கி, ‘பட்டனர் அரக்கர் என்னின், படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன எனினும், வாழ்க்கை கெடாது; இனி, கிளி அனாளை விட்டிட எண்ணியோ நான் பிடித்தது, வேட்கை வீய? | கட்டுரை அதனைக் கேளா, கண்ணெரி கதுவநோக்கி - மாலியவான் கூறிய அவ் உறுதி மொழிகளைக் கேட்டு தன் கண்களில் தோன்றிய தீப்பொறி அம்மாலியவானைப் பற்றுமாறு சினந்து நோக்கி; அரக்கர் பட்டனர் என்னின் படைத்த படைக்கலம் எல்லாம் - அரக்கர்களெல்லாம் இறந்து பட்டனர் என்றாலும், நாம் படைத்த படைக்கலங்களெல்லாம்; கெட்டன எனினும், இனி கிளி அனாளை - கெட்டுப் பயனற்றன என்றாலும், இனிக் கிளிபோன்ற சொற்களைப் பேசுகின்ற சீதையை; நான்பிடித்தது வேட்கை வீய வாழ்க்கை கெடாது விட்டிட எண்ணியோ? - நான் பற்றியது, என் |
|
|
|