பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 723

ஆசை  கெட,  என்  உயிர்  வாழ்க்கை   கெடாமல்  (கை)  விட்டுவிட
நினைத்தோ? (அன்றே என்றபடி).
 

                                                   (9)
 

8849.‘மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சினிர் வாழ்வு
                                     வேட்டிர்!
உய்ந்து நீர் போமின்; நாளை, ஊழி வெந் தீயின் ஓங்கி,
சிந்திய மனித்தரோடு, அக் குரங்கினைத் தீர்ப்பென்’
                                     என்றான்,
வெந் திறல் அரக்கர் வேந்தன். மகன் இவை
                               விளம்பலுற்றான்:
 

மைந்தன் என்? மற்றையோர் என்? - (என்) மகன் என்ன? மற்றை
யவர்தாம்  என்ன?  அஞ்சினர்,  வாழ்வு  வேட்டிர்  நீர்   உய்ந்து
போமின்
-  இவ்வாறு அச்சங்கொண்டவர்களாய் உயிர்   வாழ்க்கையை
விரும்பியவர்களாய்  உள்ள  நீங்கள்  பிழைத்துப்   போங்கள்; ‘நாளை
ஊழி  வெந்தீயின்  ஓங்கி
 -  நாளைக்கு  ஊழிக்காலத்துத் தோன்றும்
கொடிய   வடவைத்   தீப்போலப்  பொங்கி;  ‘சிந்திய  மனித்தரோடு
அக்குரங்கினைத்   தீர்ப்பென்’
  -   எனது  சேனைகளை  அழித்த
அம்மனிதரோடு   அக்குரங்கினையும்  (அனுமனை) அழித்தொழிப்பேன்’
என்றான்    வெந்திறல்   அரக்கர்   வேந்தன்,  மகன்   இவை
விளம்பலுற்றான்
-  என்று  கூறினான்  கொடிய  திறமையை  உடைய
அரக்கர்  தம் வேந்தனாகிய  இராவணன்.  (அதுகேட்ட  அவன்) மகன்
இந்திரசித்து இவற்றைச் சொல்லத் தொடங்கினான்.
 

                                                   (10)
 

                நிகும்பலை வேள்வி குறித்து இந்திரசித்தன் கூறுதல்
 

8850.‘உளது நான் உணர்த்தற்பாலது, உணர்ந்தனை கோடல்
                                        உண்டேல்;
தள மலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சார்த்தி,
அளவு இலது அமைய விட்டது, இராமனை நீ்க்கி அன்றால்;
விளைவு இலது, அனையன் மேனி தீண்டில, மீண்டது அம்மா!