பக்கம் எண் :

724யுத்த காண்டம் 

உணர்ந்தனை    கோடல்    உண்டேல்   நான்   உணர்த்தற்
பாலது உளது
- உணர்ந்து  கொள்ளும்  எண்ணம் இருக்குமாயின் நான்
கூறத் தகுவது  உளது;    தளமலர்க்கிழவன்    தந்த   படைக்கலம்
தழலின்  சார்த்தி
 - (என்னவெனில்)   இதழ்களை  உடைய  தாமரை
மலரில்  இருக்கும் பிரமன்  கொடுத்த  பிரமாத்திரத்தைத்    (தூப)  தீப
வழிபாடு  செய்து; அளவு  இலது  அமைய     விட்டது  இராமனை
நோக்கி  அன்றால்
- அளவற்ற  ஆற்றலுடையதாய்  அமைத்துவிட்டது
இராமனை  நீக்கியதன்று  (அவனையும்    கொல்ல    வேண்டுமென்றே
விடுத்தேன்);  விளைவு  இலது,   அனையன்    மேனி   தீண்டில,
மீண்டது  அம்மா!
  -  (எனினும்)      பயன்    இலதாய்     அந்த
இராமனின்   மேனியைத் தீண்டாததாய் மீண்டது (இது) பெருவியப்பாகும்.
 

                                                  (11)
 

8851.
 

‘மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும்,
மேல் நிமிர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யின்
                                        சொன்ன,
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன்
                                        என்றே,-
தேன் உகு தெரியல் மன்னா!-சேகு அறத் தெரிந்தது
                                        அன்றே.
 

தேன் உகு தெரியல் மன்னா! - தேன் சிந்தும் மாலையை அணிந்த
அரசே! மானிடன்  அல்லன், தொல்லை வானவன் அல்லன் - (அவ்
இராமன்)   மனிதகுலத்தைச்   சேர்ந்தவன்   அல்லன்,   பழைமையான
வானவர்   மரபைச்  சார்ந்தவனும்  அல்லன்;  மற்றும்  மேல்  நிமிர்
முனிவன்   அல்லன்
  -  மற்று,   மேன்மைபொருந்திய  முனிவனும்
அல்லன்;  வீடணன்  மெய்யின்  சொன்ன  - வீடணன் உண்மையாக
ஆராய்ந்து  சொன்ன; யான்  எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும்
ஒருவன்  என்றே
 - யான் எனது என்னும் செருக்கினை  நினையாமல்
நீங்கியுள்ள   ஞானிகள்   என்றும்    எண்ணுதற்கு    உரிய  ஒப்பற்ற
பரம்பொருள்   என்றே;    சேகு   அறத்   தெரிந்து  -  ஐயமறத்
தெளிவாயிற்று. ‘அன்று’ ‘ஏ’
- அசை.
 

                                                  (12)
 

8852.‘அனையது வேறு நிற்க; அன்னது பகர்தல் ஆண்மை
வினையன அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க! வீர!