பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 725

இனையல் நீ; மூண்டு யான் போய், நிகும்பலை விரைவின்
                                          எய்தி,
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால், முடியும், துன்பம்.
 

அனையது    வேறு  நிற்க  -  அத்தகைய  உண்மை  ஒருபுறம்
இருக்கட்டும்; அன்னது பகர்தல்  ஆண்மை  வினையன  அன்று -
அத்தகு    உண்மைகளைக்    கூறித்    தயங்குதல்   போராண்மைச்
செயலுக்குரியது  அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க வீர நீ இனையல் -
போரில் எதிர்த்து நின்று வீ்ழ்ந்தவர்கள் வீழட்டும்; வீர! நீ, அது பற்றி
வருந்தாதே! மூண்டு யான் போய் நிகும்பலை  விரைவின் எய்தி
-
யான்  முனைந்து  சென்று   நிகும்பலை   என்ற  கோயிலை விரைவில்
அடைந்து; துனி அறு வேள்வி  வல்லை   இயற்றினால்   துன்பம்
முடியும்
- துன்பம் அறுதற்குக்  காரணமான   வேள்வியை   விரைந்து
தொடங்கினால், நின் துன்பம் முடியும்.
 

                                                  (13)
 

                  இராவண்ன, நிகும்பலை வேள்வி பற்றி உசாவல்
 

8853.‘அன்னது நல்லதேயால்; அமைதி’ என்று அரக்கன்
                                      சொன்னான்;
நல் மகன், ‘உம்பி கூற, நண்ணலார் ஆண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்’ என்னா,
‘என், அவர் எய்தாவண்ணம் இயற்றலாம் உறுதி?’ என்றான்.
 

‘அன்னது   நல்லதேயால்;   ‘அமைதி’   என்று    அரக்கன்
சொன்னான்
- (நீ  கூறுகின்ற)  அது நல்லதே; நிகும்பலையில் வேள்வி
அமைத்துச் செய்க’   என்று   இராவணன்    கூறினான்;   நல்மகன்,
‘உம்பிகூற, நண்ணலார்  ஆண்டு நண்ணி
-  அது கேட்ட அவனது
நல்லமகனாகிய  இந்திரசித்து,   ‘உன்     தம்பி    வீடணன்   இந்த
இரகசியத்தைக் கூறக்கேட்டுப்  பகைவர் அந்நிகும்பலையை  அடைந்து;
‘முன்னிய வேள்வி முற்றாவகை  செரு  முயல்வர்’ என்னா - நாம்
கருதிய வேள்வி முற்றுப்  பெறாதபடி   போர்செய்ய   முயல்வார்களே
என்று கூறினான்; ‘அவர்  எய்தா  வண்ணம்  இயற்றலாம்  உறுதி
என்?’  என்றான்
 - அவ்வாறு அப்பகைவர்கள்