பக்கம் எண் :

726யுத்த காண்டம் 

வராதபடி செய்யத்தக்க உபாயம் என்ன’ இராவணன் வினவினான்.
 

                                                  (14)
 

                                      இந்திர சித்தன் உரை
 

8854.‘சானகி உருவமாகச் சமைத்து, அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன்முன்னே, வாளினால் கொன்று மாற்றி,
யான் நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன்
                                          என்னப்
போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர் துயரம் பூண்பார்.
 

சானகி உருவமாகச் சமைத்து - சீதையின் உருவமாக மாயையினால்
செய்து  கொண்டு;  அவள்  தன்மை  கண்டவான்  உயர்  அனுமன்
முன்னே
 -  அச்சீதையின்  தன்மையை  முன்னமே  வந்து கண்டுள்ள,
மிக்க உயர்வுள்ள அனுமனுக்கு முன்னே சென்று;  வாளினால் கொன்று
மாற்றி
  -   அவளைக்   கொன்று  உயிரைப்  போக்கிவிட்டு;  யான்
நெடுஞ்சேனையோடும் அயோத்தி மேல் எழுந்தேன் என்ன
- ‘யான்
நெடிய  சேனையோடும்  அயோத்தியின்  மேல்  போகின்றேன்’  என்று
கூறி; போனபின், புரிவது  ஒன்றும் இலாது அவர் துயரம் பூண்பார்
-  அத்திசை  நோககிப்   போயினதாகப்   போக்குக்   காட்டிவிட்டால்,
‘செய்வது    ஒன்றும்     அறியாதவராய்    (திகைத்து)      அவர்கள்
துயரங்கொள்வார்கள்.
 

அயோத்தி     மேல்   எழுகின்றேன்  என  நிகழ்காலத்தில்  கூற
வேண்டியதை   விரைவுபற்றி   ‘எழுந்தேன்’    என  இறந்தகாலத்தில்
கூறினான்.
 

                                                  (15)
 

8855.‘“இத் தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை”
                                     என்பார்,
அத் தலை, தம்பிமாரும், தாயரும், அடுத்துளோரும்,
உத்தம நகரும், மாளும் என்பது ஓர் வருத்தம் ஊன்ற,
பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார்.
 

“இத்தலைச் சீதை மாண்டாள், பயன் இவண் இல்லை” என்பார்
- “இவ்விடத்தில் சீதையோ மாண்டு போனாள்; இனி