பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 727

இங்கு     நின்று (போர்செய்வதில்)  பயன் இல்லை”  என்று   கருதும்
இராமஇலக்குவர்; அத்தலை தம்பிமாரும், தாயரும் அடுத்துளோரும்-
அவ்விடத்துத்  தம்பிமாரும்,  தாயரும்,   அடுத்துள்ள   சுற்றத்தோரும்;
உத்தம  நகரும் மாளும் என்பது  ஓர் வருத்தம்  ஊன்ற - சிறந்த
அயோத்தி   நகரத்தில்  உள்ள  மக்களும்   (இந்திரசித்தனால்)  உயிர்
ஒழிந்து  போவார்கள்’  என்பதாகிய பெருந்துன்பம்  மனதில்  ஆழ்ந்து
பற்ற;  பொத்திய  துன்பம் மூள,  சேனையும்  தாமும் போவார் -
அங்ஙனம்  கலந்த துயரம் மேன்மேல்  வளர்தலால் சேனையும்  தாமும்
அயோத்திக்குப்போய் விடுவார்கள்.
 

                                                  (16)
 

8856.‘போகலர் என்ற போதும், அனுமனை ஆண்டுப் போக்கி,
ஆகியது அறிந்தால் அன்றி, அருந் துயர் ஆற்றல் ஆற்றார்;
ஏகிய கருமம் முற்றி, யான் இவண் விரைவின் எய்தி,
வேக வெம் படையின் கொன்று, தருகுவென் வென்றி’
                                         என்றான்.
 

போகலர்  என்றபோதும்  அனுமனை  ஆண்டுப்  போக்கி  -
அயோத்திக்கு அவர்கள் போக  வில்லை  ஆயினும்  அனுமனையேனும்
அங்கே  அனுப்பி;ஆகியது அறிந்தால் அன்றி  அருந்துயர் ஆற்றல்
ஆற்றார்
 -  அங்கு  நிகழ்ந்ததை அறிந்தால் அல்லது,  தாங்குதற்கரிய
இத்துன்பத்தைத்   தாங்க  மாட்டார்கள்;  யான்ஏகிய  கருமம்  முற்றி
இவண்  விரைவின்  எய்தி
 -  நான்  (அதற்குள்) சென்ற காரியத்தை
(வேள்வியை)  முடித்துக்  கொண்டு விரைவாக  இங்குவந்து; வேகவெம்
படையின் கொன்று தருகுவென்  வென்றி என்றான்
- ‘வேகமுடைய
கொடிய   படைக்கலத்தால்   அப்பகைவரைக்   கொன்று  வெற்றியைத்
தருவேன் என்று கூறினான்.
 

                                                  (17)
 

           மாயாசீதை அமைக்க மேகநாதனும் இலங்கையை எரியூட்ட
                                     வானரங்களும் செல்லுதல்

 

8857.‘அன்னது புரிதல் நன்று’ என்று அரக்கனும் அமைய, அம்
                                          சொல்
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன்
                                      போனான்;