| இன்னது இத் தலையது ஆக, இராமனுக்கு இரவி செம்மல், ‘தொல் நகர்அதனை வல்லைக் கடி கெடச் சுடுதும்’ என்றான். | ‘அன்னது பிரிதல் நன்று’ என்று அரக்கனும் அமைய - ‘அந்தச் செயல் செய்தல் நல்லதே’ என்று இராவணனும் உடன்பட; அம்சொல்பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன்போனான் - அழகிய சொல்லையுடைய சீதையின் உருவத்தை அமைக்கும் மாயத்தைச் செய்வதற்கு அவன் மகனான இந்திரசித்தும் போயினான்; இத்தலையது இன்னது ஆக இராமனுக்கு இரவி செம்மல் - இவ்விடத்து இத்தகைய செயல் நிகழ, இராமனுக்குக் கதிரவன் மகனான சுக்கிரீவன்; தொல்நகர் அதனை வல்லைக் கடிகெடச் சுடுதும்’ என்றான் - பழமையான இலங்கை நகரை விரைவாக அதன் சிறப்புக்கெடுமாறு எரிப்போம் என்று கூறினான். | (18) | 8858. | ‘அத் தொழில் புரிதல் நன்று’ என்று அண்ணலும் அமைய, எண்ணி, தத்தினன், இலங்கை மூதூர்க் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான்; பத்துடை ஏழு சான்ற வானரப் பரவை பற்றிக் கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது, எவ் உலகும் காண. | அத்தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் எண்ணி அமைய - ‘அச்செயலைச் செய்தல் நல்லதே’ என்று பெருமை மிக்க இராமனும் சிந்தித்து உடன்பட; தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான் - சுக்கிரீவன், தாவி, இலங்கையாகிய பழைய நகரின் கோபுரத்தின் உச்சியை அடைந்தான்; பத்துடை ஏழுசான்ற வானரப் பரவை - எழுபது வெள்ளம் என்று அமைந்த வானர சேனையாகிய கடல்; பற்றி எவ் உலகும் காண ஓர் ஓர் கொள்ளி கைத்தலத்து எடுத்தது - அவனைப்பின் பற்றி (ஒவ்வொரு வானரமும்) எவ்வுலகமும் காணுமாறு ஒவ்வொரு கொள்ளியைக் கையில் எடுத்துக்கொண்டது. | (19) |
|
|
|