8864. | மூஉலகத்தவரும், முதலோரும் மேவின வில் தொழில் வீரன் இராமன், தீவம் எனச் சில வாளி செலுத்த, கோவுரம் இற்று விழுந்தது, குன்றின். |
மூஉலகத்தவரும் முதலோரும் - மூன்று உலகத்து வாழ்வோரும் முதற்கடவுளர் மூவரும்; மேவின வில் தொழில் வீரன் இராமன் - விரும்பிய வில்தொழில் வீரனாகிய இராமன்; தீவம் எனச் சில வாளி செலுத்த - தீபங்களைப் போன்ற சில அம்புகளைச் செலுத்தியதால்; கோவுரம் இற்று குன்றின் விழுந்தது - இலங்கைக் கோபுரம் இடிந்து குன்றைப் போல விழுந்தது. |
(25) |
மீண்ட அனுமன் ஆர்ப்பொலியால் இலங்கை நடுங்குதல் |
8865. | இத் தலை, இன்ன நிகழ்ந்திடும் எல்லை, கைத்தலையில் கொடு காலின் எழுந்தான், உய்த்த பெருங் கிரி மேருவின் உப் பால் வைத்த, நெடுந் தகை மாருதி வந்தான். |
இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை - இலங்கையில் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கையில்; உய்த்த பெருங்கரி கைத்தலையில் கொடு - (முன்பு) கொண்டுவந்த பெரிய மருத்து மைலையக் கையினிடத்தில் கொண்டு; காலின் எழுந்தான் மேருவின் உப்பால் - காற்றைப் போல விரைந்தெழுந்து (சென்று) மேருமலையின் அப்புறத்தில்; வைத்த நெடுந்தகை மாருதி வந்தான் - மீண்டும் கொண்டுபோய் வைத்த நெடிய தன்மையனாகிய அனுமன் திரும்பி வந்தான். |
(26) |
8866. | அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான்; உறை அரவம் செவி உற்றுளது, அவ் ஊர்; சிறை அரவக் கலுழன் கொடு சீறும் இறை அரவக் குலம் ஒத்தது, இலங்கை |
அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான் - ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த அனுமன் ஆரவாரித்தான்; உறை அரவம் அவ் ஊர் செவி உற்றுள்ளது - அந்தச் செறிந்த ஒலி |