பக்கம் எண் :

732யுத்த காண்டம் 

அவ்விலங்கையின்     செவியில் பட்டது; இலங்கை, சிறை    அரவக்
கலுழன்  கொடு  சீறும்
 -  (அவ்வார்ப்பைக் கேட்டதனால்)  இலங்கை
சிறகுகளை  உடைய  கருடன்  ஆராவாரங்கொண்டு சீறப்பெற்ற;  இறை
அரவக்குலம் ஒத்தது
- சிதறின பாம்புக் கூட்டத்தை ஒத்தது.
 

                                                  (27)
 

 அனுமன்  முன்னிலையில் இந்திரசித்தன் மாயாசீதையைக் ‘கொல்வேன்’
                                                     எனல்

 

8867.மேல் திசை வாயிலை மேவிய வெங் கண்
காற்றின் மகன்தனை வந்து கலந்தான்-
மாற்றல் இல் மாயை வகுக்கும் வலத்தான்,
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான்.
 

மாற்றல் இல்  மாயை வகுக்கும்  வலத்தான்  -  மாற்றமுடியாத
மாயத்தைச் செய்யும் வலிமை பெற்றவனும்; கூற்றையும்  வென்று உயர்
வட்டணை   கொண்டான்
 -  எமனையும்  வெற்றிகொண்டு  உயர்ந்த
வெற்றி  உலாவை  மேற்கொண்டவனுமாகிய இந்திரசித்தன்;  மேல்திசை
வாயிலை  மேவிய வெங்கண்
 - மேலை வாயிலை அடைந்த கொடிய
கண்ணையுடைய; காற்றின் மகன்தனை  வந்து கலந்தான் -  காற்றின்
மகனாகிய அனுமனை வந்து நெருங்கினான்.
 

                                                 (28)
 

8868. 

சானகி ஆம்வகை கொண்டு சமைத்த
மான் அனையாளை வடிக் குழல் பற்றா,
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்,
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான்:
 

சானகி  ஆம் வகை கொண்டு சமைத்த - சீதையாகும்  வண்ணம்
மாயை கொண்டு உருவாக்கிய; மான் அனையாளை  வடிக்குழல் பற்றா
-   ஒருமான்  போன்ற  (மருட்சியை  உடைய)  பெண்    ஒருத்தியின்
திருந்திய  கூந்தலினைப்  பற்றியவனாய்;ஊன் நகு வாள்   ஒரு கைக்
கொடு   உருத்தான்  
 -   மற்றொருகையால் தசை    விளங்குகின்ற
வாளினைப்   பற்றியவனாய்ச்  சினங்கொண்டு;  ஆனவன்   இன்னன
சொற்கள்  அறைந்தான்
  -   தனது     எண்ணத்தை   நிறைவேற்ற
முனைந்தவனாய் இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.
 

                                                 (29)