பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 733

8869.
 

‘வந்து, இவள் காரணம் ஆக மலைந்தீர்;
எந்தை இகழ்ந்தனன்; யான் இவள் ஆவி
சிந்துவென்’ என்று செறுத்து, உரை செய்தான்;
அந்தம் இல் மாருதி அஞ்சி அயர்ந்தான்.
 

“இவள்     காரணம்  ஆக  வந்து  மலைந்தீர்  - இவளைக்
காரணமாகக்கொண்டு   இங்கேவந்து   போர்   செய்தீர்கள்;   எந்தை
இகழ்ந்தனன்  -  இப்பொழுது  என்தந்தை  இவளை வேண்டாம்  என
இகழ்ந்து ஒதுக்கி  விட்டான்; யான் இவள் ஆவி சிந்துவென்” என்று
செறுத்து  உரை  செய்தான்
 -  எனவே நான் இவளுடைய உயிரைப்
போக்குவேன் என்று  வெகுண்டு  சொன்னான்; அந்தம்  இல் மாருதி
அஞ்சி    அயர்ந்தான்
-  முடிவில்லாதவனாகிய    (சிரஞ்சீவியான)
அனுமன் அஞ்சிக் சோர்ந்தான்;.
 

                                                 (30)
 

8870.

‘கண்டவளே இவள்’ என்பது கண்டான்,
‘விண்டதுபோலும், நம் வாழ்வு’ என வெந்தான்;
கொண்டு, இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான்,
‘உண்டு உயிரோ!’ என, வாயும் உலர்ந்தான்.
 

‘கண்டவளே இவள்’ என்பது கண்டாள் - (அப்பொழுது அனுமன்)
(முன்பு    அசோகவனத்தில்   தன்னால்)  காணப்பெற்றவளே   இவள்
என்பதை  உணர்ந்தான்;  நம்   வாழ்வு விண்டது   போலும்  என
வெந்தான்
-    ‘நம்வாழ்வு   அழிந்தது  போலும்’    என     மனம்
வெந்தான்; கொண்டு   இடைதீர்வது    ஓர்கோள்  அறிகில்லான்
-  அச்சீதையை    அவன்   கையிலிருந்து    விடுவித்துக்  கொண்டு
போவதொரு  நெறியை  அறிய இயலாதவனாய்;   ‘உயிர் உண்டோ?’
எனவாயும்   உலர்ந்தான்
  - உயிர்  உண்டோ?  எனக்   கண்டவர்
ஐயுறுமாற வாயும் உலரப் பெற்றான்.
 
 

                                                 (31)
 

8871.
 

‘யாதும் இனிச் செயல் இல்’ என எண்ணா,
‘நீதி உரைப்பது நேர்’ என, ஓரா,
‘கோது இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய்!
மாதை ஒறுத்தல் வசைத் திறம் அன்றோ?
 

‘யாதும் இனிச்செயல் இல்’ என எண்ணா - (அனுமன்) இனி நாம்
செய்யத்   தக்க   செயல்  ஏதும்  இல்லை  என  எண்ணியும்;   ‘நீதி
உரைப்பது நேர்’ என ஓரா
- நீதி சொல்வதே நேர்மையான  உபாயம்