8874. | ‘என்வயின் நல்கினை ஏகுதி என்றால், நின் வயம் ஆம், உலகு யாவையும்; நீ நின் அன்வயம் ஏதும் அறிந்திலை; ஐயா! புன்மை தொடங்கல்; புகழ்க்கு அழிவு’ என்றான்.* |
என்வயின் நல்கினை ஏகுதி என்றால் - இந்தச் சீதையை என்னிடத்தில் கொடுத்துச் சென்றால்; உலகம் யாவையும் நின் வயம் ஆம் - இவ்வுலகம் எல்லாம் உன் வசத்ததாம்! நீநின் அன்வயம் ஏதும் அறிந்திலை - நீ உன்னுடைய குலப்பெருமையை சிறிதும் உணர்ந்தாயில்லை! ஐயா! புன்மை தொடங்கல் புகழுக்கு அழிவு என்றான் - ஐயா! புன்மையான இச்செயலைச் செய்யத் தொடங்காதே! தொடங்கினால் நின் புகழ்க்கு அழிவு உண்டாகும் என்றான். |
(35) |
இந்திரசித்தன் மறுமொழி |
8875. | ‘எந்தையும் இந்த இலங்கை உளோரும், உய்ந்திட, வானவர் யாவரும் ஓடச் சிந்துவென் வாளினில்’ என்று செறுத்தான், இந்திரசித்தவன் இன்ன இசைத்தான்: |
எந்தையும் இந்த இலங்கை உளோரும் - என் தந்தையும் இந்த இலங்கையில் உள்ளவர்களும்; உய்ந்திட, வானவர் யாவரும ஓடச் - நல்வாழ்வு பெறவும், வானத்தவர்கள் அச்சமுற்று ஓடிவிடவும்; சிந்துவென் வாளினில், என்று செறுத்தான் - (சீதையை) வாளினில்வெட்டுவேன் என்று வெகுண்டவனாய்; இந்திர சித்தவன் இன்ன இசைத்தான் - இந்திரசித்து (மேலும்) இத்தகைய சொற்களைச் சொல்லானான். |
(36) |
8876. | ‘போமின், அடா! வினை போயது போலாம்; ஆம் எனில், இன்னும் அயோத்தியை அண்மி, காமின்; அது இன்று கனல் கரி ஆக வேம்; அது செய்து, இனி மீள்குவென்’ என்றான். |
அடா! வினை போயது போலாம்? - அடா குரங்கே! என் செய்கை இவள் கொலையோடு முடிந்துவிட்டதோ? (இல்லை); போமின், ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி - நீங்கள் |