பக்கம் எண் :

736யுத்த காண்டம் 

எல்லாம்    செல்லுங்கள், உங்களால்   ஆகும் என்றால் அயோத்தியை
நெருங்கி;  காமின்  அது  இன்று   கனல்  கரி  ஆக    வேம் -
காவல் செய்யுங்கள்; அந்த  அயோத்தி   நகரம்  இன்று    நெருப்பில்
கரியாக வேகப் போகின்றது;  அது   செய்து  இனி    மீள்குவென்
என்றான்
- அந்தச் செயலைச் செய்துவிட்டு  இப்போதே    மீள்வேன்
என்று கூறினான்.
 

                                                 (37)
 

8877.

‘தம்பியர்தம்மொடு தாயரும் ஆயோர்,
உம்பர் விலக்கிடினும், இனி உய்யார்;
வெம்பு கடுங் கனல் வீசிடும் என் கை
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா!
 

தம்பியர்  தம்மொடு   தாயரும்   ஆயோர் -    (இராமனுக்கு)
தம்பியரும், தாயரும் ஆகிய அனைவரும்; உம்பர் விலக்கிடினும் இனி
உய்யார்
- இனித்தேவர்களே வந்து  தடுத்தாலும் பிழைக்கமாட்டார்கள்;
வெம்பு கடுங்கனல் வீசிடும்  என்கை  -  வெம்புகின்ற  கடுமையான
கனலை வீசுகின்ற எனது கையிலுள்ள; அம்புகளோடும் அவிந்தனர் -
கணைகளால் இறந்தவரே ஆவார்.
 

                                 அம்மா - வியப்பிடைச் சொல்.
 

                                                 (38)
 

8878.

‘இப்பொழுதே கடிது ஏகுவென், யான்; இப்
புட்பக மானம்அதில் புக நின்றேன்;
தப்புவரே அவர், சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால்?
 

யான்இப்புட்பக  மானம் அதில் புக நின்றேன் - நான்  இந்தப்
புட்பக விமானத்தில் புக  நின்றவனாய்; இப்பொழுதே கடிதேகுவன் -
இப்பொழுதே  அயோத்திக்கு  விரைந்து செல்வேன்; சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள்
- கணக்கற்ற  எனது வெப்பம் மிக்கக் கணைகள்;
ஓடி  விரைந்தால்  தப்புவரே  அவர்? -  ஓடி  விரைந்து  சென்று
தாக்குமேயானால் அவர்கள் தப்பி விடுவார்களா? (தப்பார்).
 

                                                 (39)
 

  மாயாசீதையை வெட்டி,  இந்திரசித்தன்  படையுடன் வடக்கு நோக்கி
                                               எழுதல்

 

8879.

‘ஆளுடையாய்! அருளாய், அருளாய்!’ என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான்,