| வாளின் எறிந்தனன்; மா கடல் போலும நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான். |
ஆளுடையாய் அருளாய் அருளாய்! என்று - ‘என்னை ஆளாக உடைய அரசே! அருள்வாயாக, அருள்வாயாக என்று; ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் - (மாய்) சீதை சொல்கின்ற சொல்லுக்கு இரங்காதவனாய்; வாளின் எறிந்தனன் - அவளை வாளால் வெட்டி வீழ்த்தினான்; மாகடல் போலும் நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் - (பிறகு) கடல் போலும் முழக்கத்தையுடைய பெரிய சேனையோடு புட்பக விமானத்தில் உயர்ந்து பறந்தான். |
(40) |
8880. | தென் திசைநின்று வடாது திசைக்கண் பொன் திகழ் புட்பகம்மேல்கொடு போனான்; ஒன்றும் உணர்ந்திலன், மாருதி, உக்கான், வென்றி நெடுங் கிரி போல விழுந்தான். |
தென்திசை நின்று வடாது திசைக்கண் - தென்திசையிலிருந்து வடதிசையினிடத்தை (நோக்கி); பொன்திகழ் புட்பகம் மேல் கொடு போனான் - பொன்னொளி வீசும் புட்பக விமானத்தின் மேல் இந்திர சித்துபோனான்; மாருதி ஒன்றும் உண்ர்ந்திலன் உக்கான் - அது கண்டு அனுமன் ஒன்றும் உணராதவனாய் உயிர்ப்பிழந்து; வென்றி நெடுங்கிரி போல விழுந்தான் - (பெருமையால் ஏனைய மலைகளைப் புறங்கண்டு) வெற்றி கொண்ட நெடிய மலை வீழ்ந்தது போல வீ்ழ்ந்தான். |
(41) |
இந்திரசித்தன் நிகும்பலை புகுதல் |
8881. | போய், அவன் மாறி நிகும்பலை புக்கான்; தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான்; ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்; ஏயன பன்னினன், இன்னன சொன்னான்; |
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் - அயோத்தி நோக்கிப் போவதாகக் காட்டிய இந்திரசித்து அத்திசை மாறி நிகும்பலை என்னும் கோயிலுள் புகுந்தான்; தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான் - வஞ்சனையை உணரவியலாத |