தூயவனாகிய அனுமன் மனம் வருந்திச் சுருண்டு விழுந்தான்; நெஞ்சம் ஓய்வொடு ஒடுங்க உலர்ந்தான் - (அங்ஙனம் வீழ்ந்தவனுடைய) நெஞ்சம் ஓய்தலோடு தளர்ச்சியடைய உடலும் உலர்ந்து காய்பவனானான்; ஏயன பன்னினன் இன்னை சொன்னான் - (மேலும்) தன் மனத்தில் தோன்றியதைச் சொல்லத் தொடங்கி இத்தகைய சொற்களைச் சொல்லலானான். |
(42) |
அனுமன் அரற்றல் |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
8882. | ‘அன்னமே!’ என்னும்; ‘பெண்ணின் அருங் குலக் கலமே!’ என்னும்; ‘என் அமே!’ என்னும்; ‘தெய்வம் இல்லையோ, யாதும்?’ என்னும்; ‘சின்னமே செய்யக் கண்டும், தீவினை நெஞ்சம் ஆவி பின்னமே ஆயதுஇல்லை’ என்னும்- பேர் ஆற்றல் பேர்ந்தான். |
பேர் ஆற்றல் பேர்ந்தான் அன்னமே! என்னும் - தனது பெரிய வலிமை குறையப் பெற்றவனாகிய அனுமன் (சீதையை நோக்கி) ‘அன்னமே’ என்பான்; பெண்ணின் அருங்குலக் கலமே! என்னும் -‘பெண்களின் அரிய குலத்திற்கே அணிகலன் போன்றவளே!’ என்பான்; என் அமே! என்னும் தெய்வம் இல்லையோ யாதும்? என்னும் - ‘என் அம்மையே’ என்பான்; இத்தீமையைத் தடுக்கத் தெய்வம் எதுவும் இல்லையோ? என்பான்; சின்னமே செய்யக் கண்டும் - (உன்னை வாளினால்) சின்ன பின்னமாக்கக் கண்டும்; ‘தீவினை நெஞ்சம்ஆவி பின்னமே ஆயது இல்லை’ என்னும் - தீவினையுடைய எனது நெஞ்சமும் உயிரும் பிளந்தொழியவில்லை என்பான். |
(43) |
8883. | எழுந்து, அவன்மேலே பாய எண்ணும்; பேர் இடரில் தள்ளி விழுந்து, வெய்து உயிர்த்து, விம்மி, வீங்கும்; போய் மெலியும்; வெந்தீக் |