பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 739

கொழுந்துகள் உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்;
                           தலையே கொண்டுற்று
உழும் தரைதன்னை; பின்னும் இனையன
                               உரைப்பதானான்;
 

எழுந்து அவன் மேலே  பாய  எண்ணும்  -  (பிறகு)  எழுந்து
அவ்விந்திரசித்துவின்  மேலே பாயலாமா?  என  எண்ணுவான்;  பேர்
இடரில் தள்ளி  விழுந்து  வெய்து  உயிர்த்து விம்மி  வீங்கும்
-
தான்   பெருந்துன்பத்தில்   தள்ளிவிடப்    பட்டவனாக     விழுந்து,
வெம்மையான பெருமூச்சு விட்டு  திணறி  முகம்  வீங்குவான்;  போய்
மெலியும்   வெந்தீக்     கொழுந்துகள்        உயிர்க்கும்
  -
அந்நிலைபோய் மெலிவுறுவான் வெப்பமான   அனற்கொழுந்துகளையே
உயிர்ப்பான்; யாக்கை குலைவுறும் -  உடல்  நடுங்குவான்; தலையே
கொண்டுற்று தரை தன்னை உழும்
 - தன்  தலையையே   கொண்டு
தரையைப்    பொருந்தி    உழுவான்;     பின்னும்     இனையன
உரைப்பதானான்  
 -    பின்னர்   இத்தன்மையான    சொற்களைச்
சொல்லலானான்.
 

                                                 (44)
 

8884.

‘“முடிந்தது நம்தம் எண்ணம்; மூஉலகிற்கும் கங்குல்
விடிந்தது”என்று இருந்தேன்; மீள வெந் துயர்
                              இருளின் வெள்ளம்
படிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி!
                                       வாளால்
தடிந்தனன் திருவை! அந்தோ, தவிர்ந்தது தருமம்
                                       அம்மா!
 

முடிந்தது நம்  தம்  எண்ணம்  -  நமது  எண்ணம்  முடிந்தது;
“மூஉலகிற்கும் கங்குல் விடிந்தது”  என்று  இருந்தேன்  - மூன்று
உலகங்கட்கும்  துன்ப  இருள்  விடிந்தது  என்று  இருந்தேன்;   மீள
வெந்துயர்  இருளின்   வெள்ளம்  படிந்தது
 -  மீளவும் கொடிய
துன்பமாகிய இருளின்  பெருக்கு  வந்து படிந்தது; வினையச் செய்கை
பயந்தது
- வஞ்சகச்  செய்கையே பயனளித்து விட்டது; பாவி! வாளால்
தடிந்தனன்   திருவை!
  -   பாவியாகிய   இந்திரசித்து திருமகளின்
அமிசமான   சீதையை   வெட்டி   வீழ்த்தி   விட்டான்;    அந்தோ
தருமம் தவிர்ந்தது
- அந்தோ தருமம் தவிர்ந்து விட்டதே.