பொலங்கழலோய் - பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல் அணிந்தவனே; முரண் மூவாயிர கோடியரோடு - வலிமை உள்ள முவாயிரங்கோடி காலாட்படை; கா ஆர் கரி - காத்தலைப் பொருந்திய யானைப்படை; தேர் - தேர்ப்படை; பரி - குதிரைப் படை; காவலின் போவாய் இது போது - (ஆகியவை) காவல் செய்யப் (போர்க்களம்) போவாய் இப்போது; என்று ஏவாதன யாவையும் ஏவினனால் - என்று கூறி (இதுவரை) போருக்கு அனுப்பாத பெரும் படையை (அதிகாயனுடன் செல்க என) ஏவினான்.
|
முரண் - வலிமை, கா - காத்தல், ஆர் - பொருந்திய, பரி - குதிரை, பொலங்கழல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை, கா - முதனிலைத் தொழிற் பெயர்.
|
(15)
|
7742. | கும்பக் கொடியோனும், நிகும்பனும், வேறு அம் பொன் கழல் வீரன் அகம்பனும்,- உன் செம் பொன் பொலி தேர் அயல் செல்குவரால் உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர்.
|
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் - தேவர்களாலும் வெல்லுவதற்கு முடியாத அருமையானவராகிய பெருவலி படைத்த; கும்பக் கொடியோனும் - கும்பன் என்ற பெயர் படைத்த கொடியவனும்; நிகும்பனும் - நிகும்பன் என்பவனும்; வேறு அம்பொன் கழல் வீரன் அகம்பனும் - (இவர்களில் இருந்து) வேறுபட்ட அழகிய பொன்னால் ஆகிய கழலணிந்த வீரனாகிய அகம்பனும்; உன் செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் - உன்னுடைய சிவந்த பொன் போல் அழகு பொலிகிற தேருக்கு அருகில் (பாதுகாப்பவர்) ஆகச் செல்வார்கள்.
|
கும்பன், நிகும்பன் இருவரும் கும்பகருணனின் மகக்ள். அகம்பன் - இவன் சுமாலி என்ற அரக்கனுடைய மகன்.
|
(16)
|
7743. | ‘ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம் வார் ஏறு வயப் பரி ஆயிரம், வன் போர் ஏறிட ஏறுவ, பூணுறு திண் தேர் ஏறுதி; தந்தனென்-வெந் திறலோய்!
|
வெந்திறலோய் - கொடிய வலிமை படைத்தவனே! போர் ஏறிட ஏறுவ - போர்க்களத்தில் மேன்மேற் செல்வன; சிவற்கு உளது |