பக்கம் எண் :

740யுத்த காண்டம் 

அந்தோ -  இரக்கக்  குறிப்பு,  அம்மா -  உரையசை; வியப்பிடைச்
சொல் எனினுமாம்.  நிகழாதது நிகழ்ந்ததால் வியப்பாயிற்று. இனி  வரும்
பாடல்களிலும் ‘அம்மா’வுக்கு இங்ஙனமே உரைக்க.
 

                                                 (45)
 

8885.

‘பெருஞ் சிறைக்   கற்பினாளைப்    பெண்ணினைக்
                                 கண்ணின்கொல்ல,
இருஞ் சிறகு அற்ற புள் போல், யாதும் ஒன்று
                                இயற்றல்ஆற்றேன்;
இருஞ் சிறை அழுந்துகின்றேன்; எம்பிரான் தேவி
                                          பட்ட
அருஞ் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும்,
                                        அம்மா!
 

பெருஞ்சிறைக் கற்பினாளைப் பெண்ணினைக் -பெரியகாவலாகிய
கற்பினை   உடையசீதையை,  பெண்ணினை; கண்ணின்  கொல்ல  -
என்கண்முன்னால் கொல்லவும்; இருஞ்சிறகு அற்ற புள்போல்- பெரிய
சிறகுகளை இழந்த பறவைபோல;யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் -
யாதொன்றும்    செய்ய    இயலாதவனாய்   இருந்து;    இருஞ்சிறை
அழுந்துகின்றேன்
 -  பெரிய   துன்பச்சிறையில்    அழுந்துகின்றேன்;
எம்பிரான் தேவிபட்ட -  எம்பெருமானாகிய  இராமன்  மனைவியை
அவள்  அகப்பட்டிருந்த;   அருஞ்சிறை  மீட்டவண்ணம்  அழிகிது
பெரிதும்,  அம்மா
- பொறுத்தற்கரிய சிறையிலிருந்து மீட்ட வண்ணம்
அம்மா மிகவும் அழகிது!
 

                                                 (46)
 

8886.

‘பாதக அரக்கன், தெய்வப் பத்தினி, தவத்துளாளை,
பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை,
                                பெண்ணை,
சீதையை, திருவை, தீண்டிச் சிறை வைத்த தீயோன்
                                    சேயே
காதவும், கண்டு நின்ற கருமமே கருணைத்து
                                   அம்மா!
 

தெய்வப்  பத்தினி தவத்துளாளை - தெய்வக் கற்புடையவளாய்த்
தவத்திலிருப்பவளை;  பேதையை,   குலத்தின்   வந்த   பிழைப்பு
இலாதாளை
 -  பேதமைக் குணமுடையவளை, நல்ல குலத்திற் பிறந்த
குற்றமற்றவளை;  பெண்ணை,  சீதையை  திருவைத்  தீண்டி -பெண்
தன்மை   நிரம்பியவளை,   சீதையை,   திருமகள்   அமிச