பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 741

மானவளைக்   கவர்ந்து சென்று;  சிறை வைத்த பாதக அரக்கன்
தீயோன்  சேயே
 -  சிறையில்  வைத்த  பாதக  அரக்கனாகிய  தீய
இராவணன்   மகனே;   காதவும்    கண்டு    நின்ற    கருமமே
கருணைத்து அம்மா
- கொல்லவும்  பார்த்து  நின்ற  என்  செயலே
கருணையுடையது!
 

                                                 (47)
 

8887,

‘கல்விக்கும் நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன்
                                         ஆகி,
சொல்விக்க வந்து போனேன், ஆய இத் துயர்
                                     செய்தாரை
வெல்விக்க வந்து, நின்னை மீட்பிக்க அன்று;
                                     வெய்தின்
கொல்விக்க  வந்தேன் உன்னை; கொடும்  பழி
                          கூட்டிக் கொண்டேன்.*
 

கல்விக்கும்   நிமிர்ந்த    கீர்த்தி  -   கல்வி   அறிவிற்கும்
எட்டாது     உயர்ந்த    பெரும்புகழினை   உடைய     காகுத்தன்
தூதன் ஆகி - இராமபிரானுக்குத்  தூதுவனாகி;  சொல்விக்க  வந்து
போனேன்
-   அப்பெருமான்  சொல்லியனுப்பியவற்றை    (உன்னை
உய்விக்கும்  சொற்களை)  தெரிவிக்க  முன்  வந்து  போனேன்; ஆய
இத்துயர்  செய்தாரை வெல்விக்க வந்து
- (ஆனால்  இப்போதோ)
கூட்டமாக  இந்தத்  துயர்  செய்த அரக்கர்களை  வெல்விக்கவந்தேன்;
உன்னை மீட்பிக்க அன்று - உன்னை மீட்பிக்க அன்று;  வெய்தின்
உன்னைக்  கொல்விக்க   வந்தேன்
- கொடுமையாக   உன்னைக்
கொல்லுமாறு  செய்யவே   வந்தேன் என்று;  கொடும்பழி  கூட்டிக்
கொண்டேன்
- ஒரு  கொடும்  பழியை  நான் தேடிக்கொண்டேன்.
 

                                                 (48)
 

8888.

‘வஞ்சியை எங்கும் காணாது, உயிரினை மறந்தான்
                                        என்ன,
செஞ் சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம்
                                          தேற,
“அம் சொலாள் இருந்தாள்; கண்டேன்” என்ற யான்,
                              “அரக்கன் கொல்லத்
துஞ்சினாள்” என்றும் சொல்லத் தோன்றினேன்;
                                 தோற்றம் ஈதால்!