8890. | ‘விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் விட்டிலாதேன், கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்! எதிரே கொல்லக் கண்டு நின்றேனே நன்று; என் கையினின், கலத்தின் வெண் சோறு உண்டு நின்று, உய்ய வல்லேன்; எளியனோ? ஒருவன் உள்ளேன்!’ | கொண்டு நின்றானைக் கொல்லக் கூசினேன்! - நின்னைக் கொல்லுதற்காக கையில் கொண்டு நின்ற அரக்கனைக் கொல்லக் கூசினேன்; எதிரே கொல்லக் கண்டு நின்றேனே - ஆனால் என் கண் எதிரே உன்னைக் கொல்லக் கண்டு நின்றேனே! விண்டு நின்று ஆக்கை சிந்தப் புல் உயிர் விட்டிலாதேன் - என் உடம்பு நின்று பிளந்து இந்தச் சிறிதாகிய என்னுயிரை விடத்துணியாதவனாய்; என்கையினின் கலத்தின் வெண் சோறு - இன்னும் கையினால் கலத்திலுள்ள வெண்சோற்றினை; உண்டு நின்று உய்ய வல்லேன் நன்று - உண்டு நின்று உயிர் வாழ்வதற்கு வல்லவனாய் - வாளாநின்றேன், நல்லதே! எளியனோ ஒருவன் உள்ளேன் - இத்தகைய யான் எளியவனோ? ஒப்பற்றவனாகவே உள்ளேன். | (51) | 8891. | என்ன நின்று இரங்கி, ‘கள்வன் “அயோத்திமேல் எழுவென்” என்று சொன்னதும் உண்டு; போன சுவடு உண்டு; தொடர்ந்து செல்லின், மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் ஓரேன்; பின் இனி முடிப்பது யாது?’ என்று இரங்கினான், உணர்வு பெற்றான். | என்ன நின்று இரங்கி, கள்வன் “அயோத்திமேல் எழுவேன்” என்று - என்று சொல்லி நின்று அனுமன் இரங்கி, கள்வனாகிய இந்திரசித்து, “அயோத்திமேல் எழுகின்றேன்” என்று; சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு - சொன்னவாறே அத்திசை நோக்கிப் போன அடையாளமும் உண்டு; தொடர்ந்து செல்லின் மன்னன் |
|
|
|