பக்கம் எண் :

744யுத்த காண்டம் 

இங்கு    உற்றதன்மை உணர்கிலன் - அவனைத் தொடர்ந்து  நான்
போனால்  இராமன்  இங்கு  நடந்ததை  உணரவழியில்லை;   வருவது
ஓரேன்   பின்   இனி   முடிப்பது   யாது?
 -  இனி விளைவதை
அறியமுடியாதவனாக  இருக்கின்றயான்,  தொடர்ந்து   செய்து  முடிக்க
வேண்டுவது  எதனை?  என்று  இரங்கினான்  உணர்வு  பெற்றான்
- என்றுமனமிரங்கித் துன்புற்றவனாய்ப் பின் உணர்வினைப் பெற்றான்.
 

                                                 (52)
 

                            அனுமன் இராமனிடம் செய்தி கூறல்
 

8892.

‘உற்றதை உணர்த்தி, பின்னை உலகுடை
                               ஒருவனோடும்,
இற்று உறின், இற்று மாள்வென்; அன்று எனின்,
                            எண்ணம் எண்ணி,
சொற்றது செய்வென்; வேறு ஓர் பிறிது இலன்
                           துணிவிற்று’ என்னா,
பொன் தடந் தோளன், வீரன் பொன் அடி மருங்கில்
                                   போனான்.
 

உற்றதை  உணர்த்தி  பின்னை   இற்று  உறின்  - நடந்ததை
இராமனுக்குக்  கூறிப்  பிறகு  (அவன்) உயி ர் நீங்கப் பெறுவானாயின்;
உலகுடை  ஒருவனோடும்   இற்று   மாள்வென்   -  உலகுடைய
அப்பிரானோடு, யானும்  அழிந்தொழிவேன்; அன்று எனின் எண்ணம்
எண்ணி சொற்றது  செய்வென்
 -  அங்ஙனமில்லையாயின்  அவன்
கருத்தை எண்ணி  அறிந்து அவன் சொன்னதைச் செய்வேன்;   வேறு
பிறிது ஓர் இலன்  துணிவிற்று என்னா
- வேறு பிறிது ஒரு செயலும்
யான் உடையனல்லேன்; இதுவே துணிவு என்று;பொன் தடந்தோளன்,
வீரன் பொன் அடி மருங்கில் போனான்
- பொன்னிறமான  பெரிய
தோளை   உடைய    அனுமன்    வீரனாகிய   இராமனது   அழகிய
திருவடிகளின் மருங்கில் சென்றான்.
 

                                                 (53)
 

8893.

சிங்கஏறு அனைய வீரன் செறி கழல் பாதம்
                              சேர்ந்தான்,
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும்
                          அலக்கணுற்றான்,