பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 745

     

பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப்
                                       போர்ப்ப,

வெங் கண் நீர் அருவி சோர, மால் வரை என்ன
                                      வீழ்ந்தான்.

 

சிங்க   ஏறு அனைய வீரன் செறிகழல் பாதம்  சேர்ந்தான் -
ஆண்  சிங்கத்தைப்   போன்ற   வீரனாகிய   இராமனது    வீரக்கழல்
அணிந்த பாதத்தை   நெருங்கிய   அனுமன்;   அங்கமும்  மனமும்
கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்
 - உடம்பும்,  உளமும்  கண்ணும்
உயிரும் பதைக்கத் துயரமுற்றவனாய்;  பொங்கிய  பொருமல்  வீங்கி,
உயிர்ப்பொடு  புரத்தைப்   போர்ப்ப
  -    மனத்துள்    பொங்கி
எழுந்த அழுகைப்   பொருமல்  பெருகிப்  பெருமூச்சோடு   உடம்பின்
புறத்தை  மூடிக்கொள்ள; வெங்கண்  நீர்  அருவி  சோர, மால்வரை
என்ன வீழ்ந்தான்
-  வெம்மையான   கண்ணீர்   அருவிபோல  வீழ
பெரிய மலை வீழ்வது போல வீழ்ந்தான்.
 

                                                 (54)
 

8894.
 

வீழ்ந்தவன்தன்னை, வீரன், ‘விளைந்தது விளம்புக!’
                                     என்னா,

தாழ்ந்து, இரு தடக் கை பற்றி எடுக்கவும்,
                                தரிக்கிலாதான்,
ஆழ்ந்து  எழு  துன்பத்தாளை,  அரக்கன்,  இன்று,
                        அயில்  கொள் வாளால்
போழ்ந்தனன்’ என்னக் கூறி, புரண்டனன்,
                              பொருமுகின்றான்.
 

வீழ்ந்தவன் தன்னை வீரன் ‘விளைந்தது விளம்புக!’ என்னா -
வீழ்ந்தவனாகிய அனுமனை, ‘நடந்ததைக்  கூறுக’  என்றவாறு; தாழ்ந்து
இரு   தடக்கை   பற்றி  எடுக்கவும்,   தரிக்கிலாதான்
-  குனிந்து
அவனுடைய        பெரியகைகளைப்     பற்றி          எடுக்கவும்,
எடுக்கத்தரிக்கிலாதவனாய்;     ‘ஆழ்ந்து    எழு    துன்பத்தாளை
அரக்கன்  இன்று அயில் கொள்வாளால்
- ஆழப் பதிந்து  எழுகின்ற
துன்பத்தையுடைய சீதாபிராட்டியை அரக்கனாகிய  இந்திரசித்து  இன்று
கூர்மையான     வாளினால்;    போழ்ந்தனன்’   என்னக்  கூறிப்
புரண்டனன், பொருமுகின்றான்
 -  பிளந்து விட்டான்’  என்று கூறி
(மண்ணில்) புரண்டு விம்முவானாயினன்.
 

                                                 (55)