இராமனும் வானரர் முதலியோரும் உற்ற துயரம் | 8895. | துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன்; இமைத்திலன்; துள்ளிக் கண்ணீர் பொடித்திலன்; யாதும் ஒன்றும் புகன்றிலன்; பொருமி, உள்ளம் வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன்; வியர்த்தான்அல்லன்; அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர், அமரரேயும். | துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் - (அனுமன் கூறக்கேட்ட இராமன்) துடிதுடித்தானில்லை, பெருமூச்சு விடவுமில்லை, கண்கள் இமைக்கப் பெறவுமில்லை;துள்ளிக் கண்ணீர் பொழிந்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் - கண்ணீர்த்துளிகளைத் தோற்றுவிக்கவும் இல்லை, யாதொன்றும் பேசவுமில்லை;பொருமி உள்ளம் வெடித்திலன், விம்மிப் பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன்- தேம்பி இதயம் பிளக்கவும் இல்லை; பெருந்துயரால் வியர்க்கப் பெறவும் இல்லை; அடுத்து உள துன்பம் யாவும் அமரரேயும் அறிந்திலர்- அவனுக்கு அடுத்துள்ள துன்பம் அனைத்தையும் தேவர்கள் கூட அறிந்தாரல்லர். | (56) | 8896. | சொற்றது கேட்டலோடும், துணுக்குற, உணர்வு சோர, நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா, கற்பகம் அனைய வள்ளல் கருங் கழல் கமலக் கால்மேல், வெற்புஇனம் என்ன வீழ்ந்தார், வானர வீரர் எல்லாம். | சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர - அனுமன் சொன்னதைக் கேட்ட அளவில் மனம் திடுக்கிட, உணர்வு சோர்ந்துவிட; நல் பெருவாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்த - நல்ல பெரிய வாடைக் காற்றால் மோதுண்ட மரங்களைப் போல நடுக்கம் அடைந்து; கற்பகம் அனைய வள்ளல் கருங்கழல் கமலக் கால் மேல்- கற்பக மரம் போன்ற வள்ளல் தன்மையுடைய இராமனது பெரிய வீரக் கழல் அணிந்த கமல மலர் போன்ற பாதங்களின் மேல்; வெற்பு இனம் என்ன வீழ்ந்தார் |
|
|
|