பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 747

வானரவீரர்  எல்லாம்  - மலைகளின் கூட்டம் போல வானர வீரர்கள்
எல்லாம் வீழ்ந்தார்கள்.
 

                                                 (57)
 

8897.

சித்திரத் தன்மை உற்ற சேவகன், உணர்வு
                                 தீர்ந்தான்,
மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப்
                                  பேசான்,
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச்
                                சாய்ந்தான்.
 

சித்திரத்    தன்மை  உற்ற  சேவகன்  உணர்வு   தீர்ந்தான்
- சித்திரத்தின் தன்மை  அடைந்திருந்த  வீரனாகிய இராமன்  உணர்வு
நீங்கப்  பெற்றவனாய்;  மித்திரர்  வதனம்  நோக்கான் இளையவன்
வினவப்   பேசான்
  -  நண்பர்களின்  முகங்களைப்  பாராதவனாய்.
இலக்குவன்   கேட்டதற்கும்    பதில்    கூறாதவனாய்;     பித்தரும்
இறைபொறாத  பேர்   அபிமானம்   என்னும்
  -   பித்தர்களாய்
உள்ளவர்களும் சிறிதும் பொறுக்கவியலா  பெரிய  அபிமான  உணர்ச்சி
என்கின்ற;   சித்திரம்  மார்பில்   தைக்க  உயிர் இலன் என்னச
சாய்ந்தான்
-   படைக்கலம்  மார்பில்   பாய்தலால்   உயிர்நீங்கினன்
என்னுமாறு நிலத்தில் சாய்ந்தான்.
 

                                                 (58)
 

8898.

நாயகன் தன்மை கண்டும், தமக்கு உற்ற நாணம்
                                  பார்த்தும்,
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும்,
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து
                                     சாம்பி,
தாயினை இழந்த கன்றின், தம்பியும் தலத்தன்
                                    ஆனான்
 

நாயகன் தன்மை  கண்டும்  தமக்குற்ற  நாணம்  பார்த்தும் -
தலைவனாகிய    இராமனின்  நிலையைக்    கண்டும்,     தங்களுக்கு
ஏற்பட்டுள்ள நாணத்தக்க  நிலையை நோக்கியும்; ஆயினகருமம்  மீள
அழிவுற்ற  அதனைப்  பார்த்தும்
 -  கை கூடிவந்த செயல் மீண்டும்
அழிந்து போன நிலையினைப் பார்த்தும்; வாயொடு மனமும் கண்ணும்
யாக்கையும் மயர்ந்து  சாம்பி
 - வாயும் மனமும் கண்ணும் உடம்பும்
உணர்வழிந்து வாடி; தாயினை இழந்தகன்றின் தம்பியும்