பக்கம் எண் :

748யுத்த காண்டம் 

தலத்தன்  ஆனான் -  தாய்ப்   பசுவை  இழந்த கன்றினைப் போலத்
தம்பி இலக்குவனும் தரையில் சாய்ந்தான்.
 

                                                 (59)
 

                                     வீடணன் கொண்ட ஐயம்
 

8899.

தொல்லையது உணரத் தக்க வீடணன், துளக்கம்
                                  உற்றான்,
எல்லை இல் துன்பம் ஊன்ற, இடை ஒன்றும்
                            தெரிக்கிலாதான்,
‘“வெல்லவும் அரிது; நாசம் இவள்தனால்
                        விளைந்தது” என்னா,
கொல்வதும் அடுக்கும்’ என்று மனத்தின் ஓர் ஐயம்
                               கொண்டான்.
 

தொல்லையது   உணரத்தக்க  வீடணன்,  துளக்கம் உற்றான்
- ஒருவரின்  இயல்பினை உணரத்  தக்க அறிவுடையவனான  வீடணன்
நடுக்கமுற்றவனாய்;  எல்லையில் துன்பம்  ஊன்ற  இடை  ஒன்றும்
தெரிக்கிலாதான்
  -  பெருந்துன்பம்  அழுத்துதலால்  அதற்கிடையில்
ஒன்றும்  தெரியாதவனாய்; ‘வெல்லவும் அரிது நாசம் இவள்தனால்
விளைந்தது’   என்னா  
 - “வெல்வதும்  அரிதாக  உளது  அழிவும்
இவளால்  உண்டாயிற்று”  என்று;  கொல்வதும்  அடுக்கும்  என்று
மனத்தின்  ஓர்   ஐயம்  கொண்டான்
 -  இந்திரசித்து  சீதையைக்
கொன்றிருக்கவும்   கூடும்   என   மனத்தில்   ஒரு    சந்தேகத்தைக்
கொண்டான்.
 

                                                 (60)
 

8900.

சீத நீர் முகத்தின் அப்பி, சேவகன் மேனி தீண்டி,
போதம் வந்து எய்தற்பால யாவையும் புரிந்து, பொன் பூம்
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும்,
வேதமும் காணா வள்ளல் விழித்தனன், கண்ணை மெல்ல.
 

சீதநீர்  முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி - (வீடணன்)
குளிர்ந்த  நீரை   இராமனின்   முகத்தில்  தெளித்து    அப்பிரானின்
திருமேனியைத்  தன் கையால்  தீண்டி;  போதம், வந்து  எய்தற்பால
யாவையும் புரிந்து
 - உணர்வு வருதற்குரிய எல்லாச்  செயல்களையும்
செய்து; பொன்பூம் பாதமும் கையும் மெய்யும் பற்றினன் -