ஓர் ஏறு ஒப்பு உளவாம் - சிவபிரானுக்கு உளதாகிய ஒப்பற்ற இடபத்தை ஒப்பாக உள்ளனவாகிய; வார் ஏறுவன் வயப்பரி - வார் பூண்ட வலிய குதிரைகள்; ஆயிரம் பூணுறு திண்தேர் ஏறுதி - ஆயிரம் பூட்டப்பட்ட வலிய தேரில் ஏறுக, தந்தனென் - அதனை உனக்குத் தந்தேன்.
|
போர் ஏறிட ஏறுவ, சிவற்கு ஓர் ஏறு ஒப்பு உளவாம். வார் ஏறுவன் வயப்பரி ஆயிரம் பூணுறு திண்தேர் எனக் கூட்டி உரைக்க. ஏறு - காளை. இத்தேர் இராவணனுக்குப் பிரமன் தந்தது என உரைப்பர். அது கருதியே திண் தேர் என்றனன் எனவும் கருதுவர். திண்தேர், வெந்திறல் - பண்புத் தொகைகள், ஏறுதி - முன்னிலை ஒருமை வினை முற்று.
|
(17)
|
7744. | ‘ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் சேமத்தன பின் புடை செல்ல, அடும் கோ மத்த நெடுங் கரி கோடியோடும், போம், அத்தனை வெம் புரவிக் கடலே,’
|
ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் - பொருந்திய அத்தனை (ஆயிரம்) குதிரைகள் பூண்ட அத்தனை தேர்களும்; சேமத்தன பின்புடை செல்ல - பாதுகாவலாகப் பின்னும் பக்கங்களிலும் செல்ல; அடும் கோ மத்த நெடுங்கரி - கொல்லும் தன்மை உள்ள தலைமைத் தன்மை வாய்ந்த மதம் பொருந்திய நெடிய யானைகள்; கோடியொடும் - கோடியோடு; அத்தனை வெம்புரவிக் கடலே போம் - அத்தனை கொடிய புரவிக் கடலும் (உன் உடன்) வரும்.
|
எல்லாத் தேர்களும் குதிதைகள் பூட்டப்பட்டு, மதங்கொண்ட நெடிய யானைகள் கோடியோடு, புரவிக் கடலும் உன் உடன் வரும் என்கிறான் இராவணன், பின்புடை - உம்மைத் தொகை. புரவிக் கடல் - உருவகம்.
|
(18)
|
7745. | என்றே விடை நல்க, இறைஞ்சி எழா வன் தாள் வயிரச் சிலை கைக் கொடு, வாள் பொன் தாழ் கவசம் புகுதா, முகிலின் நின்றான்; இமையோர்கள் நெளிந்தனரால்.
|
என்றே விடை நல்க - என்று (இராவணன் கூறி) விடை தர; இறைஞ்சி எழா - (அதிகாயன்) வணங்கி எழுந்து; வன்தாள் வயிரச் சிலை கைக்கொடு - வலிய முனையை உடைய உறுதியான |