பக்கம் எண் :

750யுத்த காண்டம் 

8902.

‘முடியும் நாள் தானே வந்து முற்றினால், துன்ப முந்நீர்
படியுமாம், சிறியோர் தன்மை; நினக்கு இது
                                பழியிற்றாமால்;
குடியும் மாசு உண்டதுஎன்னின், அறத்தொடும்
                             உலகைக் கொன்று,
கடியுமாறு அன்றி, சோர்ந்து கழிதியோ, கருத்து
                                 இலார்போல்?
 

முடியும் நாள் தானே வந்து முற்றினால் - ஒருவருக்கு முடிவுநாள்
(ஊழ்வினையால்) தானே  வந்து சேர்ந்தால்; துன்ப முந்நீர்  படியுமாம்
சிறியோர் தன்மை
 -  துன்பமாகிய கடலில் அழுந்தி விடும்  தன்மை
சிறியோர்   தன்மையாகும்;  நினக்கு   இது  பழியிற்று  ஆமால் -
(பெருந்தன்மையுடைய)    நினக்கு   (துன்பக்கடலில்     அழுந்துவது)
இத்தன்மை  பழியினைத்   தருவதாகும்;   குடியும்  மாசு   உண்டது
என்னின்
 - (அறத்துவழிப்படும்)  நமது குடியும் மாசுபட்ட  தென்றால்;
அறத்தொடும்    உலகைக்    கொன்று    கடியுமாறு    அன்றி
- (பயன்படாத)தருமத்தையும்   (தகாத   செயலைப்   பார்த்து   நின்ற)
உலகத்தையும்  அழித்து   ஒழிப்பதல்லாமல்;  கருத்து   இலார்போல்
சோர்ந்து  கழிதியோ
  -  கருத்தில்லாதவர்போல  மனம்  சோர்ந்து
கிடப்பாயோ?
 

                                                 (63)
 

8903.

‘தையலை, துணை இலாளை, தவத்தியை, தருமம்
                                     கற்பின்
தெய்வதம்தன்னை, மற்று உன் தேவியை, திருவை,
                                     தீண்டி,
வெய்யவன் கொன்றான்என்றால், வேதனை உழப்பது,
                                    இன்னம்
உய்யவோ? கருணையாலோ? தருமத்தோடு உறவும்
                                  உண்டோ?
 

தையலை,  துணை  இலாளை,  தவத்தியை  -  மெல்லியலாகிய
பெண்ணை,  துணையில்லாதவளை,   தவ  நிலையில்    இருப்பவளை;
தருமக் கற்பின் தெய்வம்   தன்னை  மற்று  உன்  தேவியை  -
அறநெறியாகிய  கற்பின்  தெய்வமாக இருப்பவளை,  அறத்தைக்காக்கும்
நின்தேவியை;  திருவைத் தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால்
- திருமகள் போல்பவளை கையால் தீண்டி