பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 751

கொடியவனாகிய  இந்திர சித்து கொலை செய்தான் என்றால்; வேதனை
உழப்பது   இன்னம்  உய்யவோ? கருணையாலோ?
-  (அறத்தோடு
இவ்வரக்கர்   குலத்தையும்  வேரோடு  அழிக்காமல்) வேதனைப்படுவது,
இன்னும்   உயிர்   உய்ந்து   வாழ  வேண்டும் என்பதாலோ  அன்றிக்
கருணையாலோ?   தருமத்தோடு    உறவும்  உண்டோ?  -  இனித்
தருமத்தோடு நமக்கு உறவென்பது உண்டோ? (இல்லை என்றவாறு).
 

                                                 (64)
 

8904.

‘அரக்கர் என், அமரர்தாம் என், அந்தணர்தாம் என்,
                                       அந்தக்
குருக்கள் என், முனிவர்தாம் என், வேதத்தின்
                            கொள்கைதான் என்;
செருக்கினர் வலியர் ஆகி, நெறி நின்றார்
                               சிதைவர்என்றால்,
இருக்குமிது என்னாம், இம் மூன்று உலகையும் எரி
                                      மடாதே?
 

செருக்கினர் வலியர்  ஆகி  நெறி நின்றார சிதைவர் என்றால்
(அறநெறிவிடுத்து)  செருக்கினவர் வலியவர்களாகி,  அறநெறி  நின்றோர்
சிதைவார்களென்றால்;அரக்கர் என், அமரர்தாம் என் அந்தணர்தாம்
என்
- (நமக்குஇனி) அரக்கர்கள் என்ன, அமரர்கள் என்ன,   அந்தணர்
தாம் என்ன;  அந்தக்  குருக்கள்  என்   முனிவர்   தாம்   என்,
வேதத்தின்  கொள்கைதான்  என்
  -  அந்தக்   குருக்கள்  என்ன,
முனிவர்தாம்   என்ன, வேதத்தின் கொள்கைதானென்ன (இவர் யாவரும்
ஒருங்கே     அழியுமாறு) ;   இம்மூன்று  உலகையும்   எரிமடாதே
இருக்குமிது  என்னாம்
-  இந்த மூன்று  உலகையும்     நெருப்புக்கு
இரையாக்காது    வருந்திக் கொண்டிருப்பது என்ன பயனைத் தரும்?
 
 

                                                 (65)
 

8905.

‘முழுவது  ஏழ் உலகம்  இன்ன முறை முறை செய்கை
                                 மேல் மூண்டு,
எழுவதே! அமரர் இன்னம் இருப்பதே! அறம் உண்டு
                                       என்று
தொழுவதே! மேகம் மாரி சொரிவதே! சோர்ந்து நாம்
                                      வீழ்ந்து
அழுவதே! நன்று, நம்தம் வில் தொழில் ஆற்றல்
                                      அம்மா!