8906. | ‘புக்கு, இவ் ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து, அரக்கன் போன திக்கு எலாம் சுட்டு, வானோர் உலகு எலாம் தீத்து, தீரத் தக்க நாம், கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இரு கை நாற்றி, துக்கமே உழப்பம்என்றால், சிறுமையாய்த் தோன்றும் அன்றே? |
புக்கு, இவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து - புகுந்து இந்த இலங்கையை இமைப்பொழுதில் பொடிபடும் படி அழித்துவிட்டு; அரக்கன் போன திக்கு எலாம் சுட்டு - அரக்கன் போன திசை எல்லாவற்றையும் சுட்டு; வானோர் உலகு எலாம் தீத்து தீரத்தக்க நாம் - வானவர் உலகம் முழுவதையும் அழித்து அழியத் தக்க நாம்; கண்ணீர் ஆற்றி, தலை சுமந்து இருகை நாற்றி - (அவற்றைச் செய்யாது) கண்ணீர் பெருக்கிக்கொண்டு தலையையும் சுமந்து கொண்டு, இருகைகளையும் தொங்கவிட்டுக் கொண்டு; துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய்த் தோன்றும் |