பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 753

அன்றே -  துக்கப்பட்டுக் கொண்டே இருப்போம் ஆயின்  இது  பிறர்
கண்ணுக்குச் சிறுமையாய்ப் படுமன்றோ,
 

                                                 (67)
 

8907.

‘அங்கும், இவ் அறமே நோக்கி, அரசு இழந்து,
                                   அடவி எய்தி,
மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது
                                   வாழ்ந்தோம்;
இங்கும், இத் துன்பம் எய்தி இருத்துமேல், எளிமை
                                       நோக்கி,
பொங்கு வன் தளையில் பூட்டி, ஆட்செயப் புகல்வர்
                                      அன்றே?
 

அங்கும்,  இவ் அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி -
அவ்விடத்தும் (அயோத்தியிலும்)   அந்தத்   தருமத்தையே   நோக்கி
அரசினை  இழந்து  கானகத்தை அடைந்து; மங்கையை வஞ்சன் பற்ற
வரம்பு அழியாது வாழ்ந்தோம்
- சீதையை வஞ்சகனாகிய இராவணன்
கவர்ந்து  செல்லவும்  தருமத்தின்  வரம்பினைக் கெடாது வாழ்ந்தோம்;
இங்கும்  இத்துன்பம் எய்தி  இருத்துமேல்  எளிமை  நோக்கி -
(சீதை கொலைக்குப் பின்னும்)  இந்த  இலங்கையிலும் இந்தத்  துன்பம்
அடைந்து    கொண்டு   இருப்போமாயின் நம் எளிமையைப் பார்த்து;
பொங்குவன்  தளையில்  பூட்டி  ஆட் செயப் புகல்வர் அன்றே
- (நம்பகைவர்)  வலிமைமிக்க  தளையில் நம்மைப்  பூட்டி  அழைத்துச்
சென்று அடிமை செய்யுமாறு சொல்லுவார்கள் அன்றோ?
 

                                                 (68)
 

8908.

‘மன்றல் அம்  கோதையாளைத்  தம் எதிர்
                           கொணர்ந்து, வாளின்
கொன்றவர்தம்மைக் கொல்லும் கோள் இலர், நாணம்
                                        கூரப்
பொன்றினர்’ என்பர், ஆவி போக்கினால்; பொதுமை
                                    பார்க்கின்,
அன்று, இது கருமம்; என், நீ அயர்கின்றது, அறிவு
                                 இலார்போல்?’
 

ஆவி   போக்கினால்  -  இப்பொழுது   துன்பத்தினால்   உயிர்
விடுவோமாயின்; ‘மன்றல்  அம்   கோதையாளைத்   தம்   எதிர்
கொணர்ந்து
- மணம்மிக்க அழகிய கூந்தலை உடைய சீதையைத்